பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cinnamon

302

circulation


cinnamon : இலவங்கப் பட்டை : இலவங்க மரப்பட்டை, வயிற்று உப்புச்சத்தை அகற்றும் தன்மை யுடையது. சிலசமயம் வயிற்றுப் போக்கு மருந்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.

ciprofloxacin : சிப்ரோஃபிளாக்சாசின் : ஃபுளுரோகுவினோலோன் என்னும் செயற்கை நோய் முறியம். இது பல கிராம்-நேர் படிவ மற்றம் கிராம்-எதிர் படிவ உயிரிகளுக்கு எதிராகச் செயற்படக் கூடியது.

circinate : வளையக் கொப்புளம்; வட்ட உரு; வட்ட வட்டமான : கிரந்தி நோயில் படர்தாமரை போன்று தோலில் உண்டாகும் வளைய உருவக்கொப்புளங்கள்.

circulation : குருதிச்சுற்றோட்டம் : சாதாரணமாக உடலெங்கும் ஏற்படும் இரத்தச் சுழற்சியை இது குறிக்கும்.