பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

circumcision

303

cistron


circumcision : சுன்னத்து செய்தல்; முனைத்தோல் வெட்டல்; நுனித் தோல் நீக்கம் : தோல் நுனியிதழ் அகற்றுதல்.

circumduction : சுற்று சுழற்சி : உறுப்பினை அல்லது கண்ணை சுற்றிச் சுழலச் செய்தல்.

circumoral : மைனாவாய்; வாயைச்சுற்றி; வாய்சூழ் : மைனாவின் வாயைச் சுற்றியுள்ளது போல் வாய்த்தோலைச் சுற்றி வெண்ணிறம் தோன்றுதல். செம்புள்ளி நச்சுக்காய்ச்சலின் ஒர் அறிகுறி.

circumscribed : சுற்றிவட்டமிடுதல் : ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்துதல், சுற்று வரையறை செய்தல்.

circumstantiality : சிந்தனைச் சிதறல் : சிந்தனைச் செயல் முறை சிதறுதல். இதில் முக்கியத் துவமல்லாத அற்ப நுணுக்கங்களை ஒருவர் அவசியமின்றி மிக விரிவாகக் கற்பனை செய்வார்.

circumvallate : சூழ்வளையம்; வட்டப்பொட்டு : நாக்கின் அடிப் பகுதியிலுள்ள பெரிய சுற்று அடுக்குத்தசை போன்று சூழ்ந்து பரவியுள்ள வளையம்.

cirrhosis : உறுப்புத் தடிப்புக் கோளாறு; கரணை நோய்; ஈரல் இறுக்கி : உறுப்பின் இழைமம் இற்றுப் போய் இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடையும் கோளாறு.

cirsectomy : சுருள்சிரை அறுவை : ஒரு சுருள் சிரையின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல்.

cirsoid : நரம்புக் காழ்ப்பு; சுருள் மலி : நரம்புப் புடைப்புக் கோளாறு.

cisplatin : பிளாட்டினக் கூட்டுப் பொருள் : உக்கிர வேகமுடைய நிலைகளில் சிகிச்சையளிப்பதற் குரிய ஒரு பிளாட்டினம் கூட்டுப் பொருள்.

cistern : தேக்கப்புழை : 1. உண வுப்பால், நிணநீர், மூளைத் தண்டுவடநீர் போன்ற திரவங்களைத் தேக்கிவைத்துக் கொள்ளப் பயன்படும் உட்குழிவு அல்லது உட்புழை. 2. ஊன்ம உள் கூழ்மச் சவ்வின் தட்டையான பைகளுக்கு அல்லது இருஅணு உறைச் சவ்வுகளுக்கு இடையிலுள்ள மிக நுண்ணிய இடம்.

cisternography : மூளைக் குழி ஆய்வுப் படம் : ஒளி ஊடுருவக் கூடிய ஊடகத்தை ஊசிமூலம் சவ்வு வழியாகச் செலுத்திய பிறகு பெருமூளையின் புழை யுறையினை ஊடுகதிர்ப்பட முறையில் ஆராய்தல்.

Cistron : மரபணு அலகு : மரபணுப்பொருளின் மிகச் சிறிய அலகு. இது மரபணுவை ஒத்தது எனக் கருதப்படுகிறது.