பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clinic

307

clitoridectomy


இது தாய்க் கலவையைவிட அதிகச் செயலூக்கம் வாய்ந்தது.

clinic : மருந்தகம்; பண்டுவமனை : 1. நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சி போதிக்கும் நிலையம். 2. ஊர்தி மருத்துவ நோயாளிகளைக் கவனிக்கும் நிலையம்.

clinical : மருத்துவப் பயிற்சி சார்ந்த; மருத்துவ : படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த, நோயாளிகளைப் பரிசோதனை செய்தல், அவர்க்குச் சிகிச்சை அளித்தல் குறித்து ஏட்டில் படித்ததை நடைமுறைப் பயிற்சி மூலம் கற்றல் சார்புடைய.

clinician : மருத்தகத் தொழிலாற்றுநர் : நோயாளிகளைக் கவனிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு சுகாதாரத் தொழிலாற்றுநர்.

Clinimycin : கிளினிமைய்சின் : ஆக்சிடெட்ராசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

clinicopathologic : மருந்தக வேதியியல் : ஆய்வுக் கூடத்தில் சடல ஆய்வு அல்லது உடல் திசு ஆய்வு மூலம் புலனாகும் கோளாறுகள் மூலமாக நோயாளியின் நோய் இயல்புகளை ஆராய்தல்.

clinistix : கிளினிஸ்டிக்ஸ் : சிறு நீரிலுள்ள குளுக்கோஸ் அளவை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் ஆக்சிடேஸ் என்ற வினைஊக்கிப் பொருள்.

clinitest : கிளினிடெஸ்ட் : சிறு நீரில் சர்க்கரை போன்ற பொருள்களின் குறைவைப் பரிசோதிப்பதற்குப் பயன் படுத்தப்படும் தாமிர சல்பேட் விளையூக்கி மாத்திரைகள்.

clinocephaly : சேணமண்டை : மண்டையோட்டின் மேற்பரப்பில் சேணம் வடிவம் போல் தோற்றம் அளிக்கும் ஒரு உட்குழிவான பரப்பு. இது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு கோளாறு.

clinodactyly : விரல்கோட்டம் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விரல்கள் நிரந்தரமாகக் கீழ்நோக்கி வளைந்திருத்தல் அல்லது திரிபடைந்திருத்தல்.

clip : பிடிப்பு ஊக்கு : கத்திரியில் வெட்டப்பட்ட காய விளிம்புகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஒர் உலோகச் சாதனம்.

cliseometer : கிளிஸ்யோமீட்டர் : உடலின் அச்சுக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையிலான கோணங்களை அளவிடுவதற்கான ஒரு சாதனம்.

clitoridectomy : பெண்கந்து அறுவை மருத்துவம் : பெண்