பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cochlear implant

314

coding system


சுருளை : காதில் நத்தைக்கூடு போன்று சுருண்டு வளைந்து இருக்கும் கருள் வளை.

cochlear implant : செவிச்சுருள் வளைச் சாதனம் : செவிட்டுத் தன்மையைக் குணப்படுத்துவதற்கான ஒரு சாதனம். இதில், செவியின் சுருள் வளையின் உள்ளே பொருத்துப்பட்ட மின்வாய்கள் அடங்கியிருக்கும். இது ஒலி உண்டாக்கு நரம்புத் துண்டல்களை மூளைக்கு அனுப்பிவைக்கிறது.

cochleosaccultomy : செவிச்சுருள்வளை அறுவைச் சிகிச்சை : செவியின் சுருள்வளை நாளத்துக்கும் நுண்மைக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கும் ஒரு இடை கடத்தி. செவிநிண நீர்த்துளி களை விடுவிப்பதற்கு வட்டச் சன்னல் வழியாக இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது.

cocktail : கலவை மருந்து : பல்வகை ஆக்கக்கூறுகள் அல்லது மருந்துகள் அடங்கிய ஒரு கலவை.

cocoa : கோக்கோ : கெக்கேயோ மரத்தின் விதை, சாக்லேட் செய்யப் பயன்படும் கெக்கே யோ விதைத்தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானம். இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், கட்டி, வீக்கம் முதலிய நோய்களுக்கு இடும் இளக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

coctostabile : மாறாநிலைப்பாடு : நீரின் கொதிநிலை வரையிலும் சூடாக்கினால் மாற்றமடையாத நிலைப்பாடு.

code : ஒழுக்க நெறி : 1. ஒழுக்க நெறியினை முறைப்படுத்தும் சாதி முறைகளின் அல்லது நெறிமுறைகளின் ஒரு தொகுப்பு. 2. செய்திகளை அனுப்புவதற்கான ஒரு குழுவுக் குறிமுறை.

codeine : கோடன் : உறங்க வைக்கும் மருந்தாகப் பயன் படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து இருமலை அடக்கும்.

codependency : சகச்சார்புநிலை: சார்ந்து வாழ்பவருடன் நெருங்க இணைந்து வாழும் நெருக்கடி நிலை.

cod fish vertebra : 'காட்' மீன் முள்ளெலும்பு : முள்ளெலும்பின் கனிம அடர்த்தி போகப் போகக் குறைதல். இதனால், முள் எலும்புகளுக்கிடையிலான வட்டு விரிவடைகிறது.

coding system : குறியீட்டுமுறை : நோய்களை வகைப்படுத்தும் முறை. இதில் பொதுவாள பண்பியல்புகளக்கேற்ப நோய்கள் குழுமமாகப் பகுக்கப் படுகின்றன. இதன் மூலம் நோய் நிகழ்வினை புள்ளி விவர அடிப் படையில் ஆய்வு செய்ய