பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coffee ground vomit

316

coinfection


coffee ground vomit : இரத்த வாந்தி : இரத்தம் கலந்த வாந்தி, இது காப்பிக் கசட்டினை ஒத்திருக்கும்.

Cogan's syndrome : கோக்கான் நோய் : காதிரைச்சல், செவிட்டுத் தன்மை ஆகியவற்றுடனான காது அழற்சிநோய். அமெரிக்கக் கண் மருத்துவ அறிஞர் டேவிட் கோகான் பெயரால் அழைக்கப் படுகிறது.

cognition : புலனுணர்வு; அறிதல் நிலை; தெரிதல்; அறிகை; நினை வுறல் : இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் சேர்த்து அறிதல் என்னும் ஒட்டுமொத்தமான செயல்பாட்டைக் குறிக்கும் சொல்லாக அமைந்து உள்ளது எனக் கூறலாம்.

cohort : பொதுப்பண்பு மக்கள் குழுமம் : 1. ஒரு குறிப்பிட்ட பிறப்புக் கால அளவுக்குள் ஒரு பொதுவான பண்பியல்பினையுடைய அல்லது அனுபவத்தையுடைய ஒரு மக்கள் குழுமம். 2. ஒரே நாளில் அல்லது ஒரே கால அளவுக்குள் பிறந்த மக்களின் ஒரு குழுமம். 3. ஐயுறப்படும் காரணத்துக்கும் நோய்க்குமிடையில் தொடர்பு இருப்பதை ஆதரிப்பதற்கு அல்லது மறுப்பதற்குச் சான்று பெறுவதற்கு நடத்தப்படும் நுண்ணாய்வு.

coin counting : நாணயக்கணிப்பு நோய் : கட்டைவிரல் நுனியும் சுட்டு விரல் நுனியும் ஒன்றன்மேல் ஒன்ற ஊர்ந்து செல்லும் வகையில் அமைந்திருத்தல். வாத வலிப்பின்போது இது காணப்படும்.

coin lesion : நாணய நசிவுப்புண் : நுரையீரல் சோற்றுத் திசுவில் சிறிய வட்டவடிவில் அல்லது முட்டைவடிவில் காணப்படும் ஒற்றை நைவுப்புண். இது, நோய்க்குறி காணப்படாத நோயாளிகளின் மார்பில் ஊடு கதிர்ச் சோதனை நடத்தும் போது இது புலனாகிறது.

coin test : நாணயச் சோதனை : ஒரு தனிவகை அசைவு-இயக்கத் துடிப்புக் குறி. இதில் மார்பின் பின்பக்கத்தில் அல்லது முன் பக்கத்தில் இரு நாணயங்களை வைத்து எதிர்ப்பக்கம் இயக்கப்படுகிறது. இரு பகுதிகளுக்கும் இடையில் காற்று இருந்தால், உலோக மணியோசை போன்று ஒலிகேட்கும்.

coinfection : சகநோய் : இரு வேறுபட்ட துண்ணுயிரிகளினால் ஒரே சமயத்தில் நோய் உண்டாதல்.