பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colchicum

317

collagenoblast


colchicum : இரணிய துத்தம் : கீல்வாதம், முடக்கு வாதம் முதலிய வாத நோய்களுக்குப் பயன்படும் மருந்துப் பூண்டு வகை.

cold : தடுமன்; நீர்க்கோள் ; சளி : இது தட்பவெப்ப நிலைகள் திடீரென மாறும்போது ஏற்படக் கூடும்.

cold sore : வாய்ப்புண் : கடுங் குளிர்ச்சியினால் வாயில் ஏற்படும் புண்.

colectomy : பெருங்குடல் அறுவை மருத்துவம்; பெருங்குடல் பகுதி நீக்கம் : பெருங் குடலின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல்.

colic : கடும் வயிற்றுவலி; குடல் தசைச் சுருக்கு வலி : அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு.

coliform : மலக்கிருமி : கடும் வயிற்று வலி உண்டாகும். கிருமியை ஒத்த ஒரு பாக்டீரியம். இது மலத்தில் பலுகக்கூடியது.

colipase : கோலிஸ்பேஸ் : கொழுப்புத் துளிகளினால் செயற்படும் புறச்சுரப்புக் கணையங்களில் சுரக்கும் டிரிப்சின் இயக்கு புரோஎன்சைம்.

coliplication : பெருங்குடல் அறுவை மருத்துவம் : விரிவாக்கம் அடைந்த பெருங்குடலைச் சீர்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை,

colistin : கோலிஸ்டின் : கிராம் சாயம் எடுக்காத உயிரிகளுக்கு எதிராகச் செயற்படக்கூடிய ஒரு வகை உயிர் எதிர்ப்புப் பொருள்.

colitis : குடல் அழற்சி; பெருங் குடல் அழற்சி : பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம்.

collagen : எலும்புப் புரதம்; சவ்வு (கொல்லாஜன்) : தோல், தசைத் தளை, எலும்பு, குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் அமைந்துள்ள முக்கியமான புரதம். இது நோயுறுவதால் வீக்கத்துடன் கூடிய நைவுப் புண் உண்டாகிறது. இந்நோய்க் காரணம் பலவாக இருக்கலாம்.

collagenase : கொல்லானேஸ் (எலும்புப் புரதச் சிதைப்பான்) : எலும்புப் புரதம் சிதைவதற்காக அதன் மீது செயற்படுகிற ஒரு செரிமானப் பொருள்.

collagenoblast : எலும்புப் புரத உயிரணு : ஒர் எலும்புப் புரத உயிரணுவிலிருந்து உருவாகும் ஒர் உயிரணு. இது முதிர்ச்சி அடைந்ததும் எலும்புப் புரத உற்பத்திக்குத் துணைபுரிகிறது.