பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colorimetry

321

colphysterectomy


colorimetry : நிறமானிச் செயல் முறை : ஒரு சோதனைக் கரை சலில் உருவாகும் வண்ணத்தின் மூலம் ஒளி ஈர்ப்புத் திறனை ஒரு தரநிலைக் கரைசலின் திறனுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் ஒர் ஒளிமானிச் செயல் முறை.

colostomy : பெருங்குடல் செயற்கை வாய் அறுவைச் சிகிச்சை : பெருங்குடல் இறுதியில் கீறிச் செயற்கைக்குதம் உண்டாக்குதல்.

colostration : குழந்தை நோய் வகை : பிறந்த குழந்தை அருந்தும் முதல் பாலால் ஏற்படும் ஒரு வகை நோய்.

colostrum : சீம்பால் : குழந்தை பிறந்த முதல் 3 நாட்களில் தாயின் மார்பகத்தில் சுரக்கும் பால். முறையான பால் சுரப்பதற்கு முன்பு இந்தப் பால் சுரக்கிறது.

colotomy : பெருங்குடல் அறுவை மருத்துவம்; பெருங்குடல் நீக்கல் : பெருங்குடல் இறுதிப்பகுதியில் கீறிச் செயற்கைக் குதம் உண்டாக்குதல்.

colour blindness : நிறக்குருடு; நிறப்பார்வையின்மை : சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலைமை. சிலருக்குச் சில நிறங்களைக் காண இயலாது. சிவப்பு நிறத்தையும், பச்சை நிறத்தையும் பகுத்தறிய முடியாத நிலையை 'நிறமயக்கம்' (டால்டனிசம்) என்பர்.

colovaginal : பெருங்குடல்-யோனிக் குழாய் தொடர்பு : பெருங்குடல் மற்றும் யோனிக்குழாய் சார்ந்த அல்லது இரண்டுக்குமிடையிலான தொடர்பு.

colovesical : பெருங்குடல்-சிறுநீர்ப்பை தொடர்பு : பெருங்குடல் மற்றும் சிறுநீர்ப்பை சார்ந்த அல்லது இரண்டுக்கும் இடையிலான தொடர்பு.

colpitis : யோனிக்குழாய்; அல்குல் அழற்சி : பெண்ணின் கருப்பை வாய்க்குழாயில் ஏற்படும் வீக்கம்.

colpoceliotomy : அடிவயிற்று அறுவைச் சிகிச்சை : யோனிக் குழாய் வழியாக அடிவயிற்றில் வெட்டுப்பள்ளம் ஏற்படுத்துதல்.

colpocete : நெகிழ்வு நீட்சி : சிறு நீர்ப்பையின் அல்லது மலக் குடலின் நெகிழ்ச்சி முன்புறம் நீண்டு, யோனிக்குழாய்ச் சுவரை அழுத்துதல்.

colpocentesis : யோனித் திரவ வெளியேற்றம் : யோனிக்குழாயில் இருந்து திரவம் வெளியேறுதல்.

colphysterectomy : கருப்பை நீக்கம்; அல்குல் வழி கருப்பை நீக்கம் : யோனிக் குழாய் வழியாக கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம்.