பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

complement fixation

324

compress


குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதிய அளவு கிடைக்காத போது அந்தக் குறையை நிரப்பு வதற்குகாகக் கொடுக்கப்படும் புட்டி உணவு.

complement fixation : குறை நிரப்பு நிலைப்பாடு : குறைநிரப்பினைப் பயன்படுத்திக் காப்பு மூலம் தற்காப்பு மூலக்கோளாறு ஏற்படுவதைத் தீர்மானிப்பதற்கான ஒரு சோதனை.

complex : செறிதேக்க உணர்ச்சி; மனப்போங்கு; மனப்பான்மை; உளப்போக்கு : அடக்கி உணர்வு ஆழத்தின் மறதியில் செறிவிக்கப் பெற்றுக் குமுறும் உணர்ச்சித் தொகுதி. எதிர் பாலராகிய பெற்றோர் வகை யில், பிள்ளைகளுக்கு உட்செறிவாக இருப்பதாகக் கருதப்படும் உள்உணர்ச்சி இதற்கு எடுத்துக் காட்டு.

complex disorder : கலப்புக் கோளாறு : ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு அமைவிடம், சுற்றுச் சூழல் காரணிகள், மரபணு வகை இடைவினைகள் ஆகியவற்றின் பரப்பரையிலிருந்து ஏற்படும் ஒரு கோளாறு.

complexion : இயல்நிறம் : முகத்திலுள்ள தோலின் வண்ணம், இழை நயம் மற்றும் தோற்றம்.

compliance : இணக்கம் : 1. சீர் குலைவில்லாமல் வடிவளவும், வடிவும் மாறுகிற தன்மை. 2. குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறையை அல்லது அறிவுரையை நோயாளி கடைப்பிடித்து நடக்கும் அளவு.

complication : உடனியக்க நோய்கள்; சிக்கலான; சிக்கலுற்ற : ஒரே சமயத்தில் பல நோய்கள் உடனியலுதல். இவ்வாறு ஏற்படுவதால் மரணம் விளையலாம்.

composmentis : நலமார்ந்த மனநிலை; நேர் உளத்திய : அறிவுக் கோளாறற்ற, நல மார்ந்த உள்ளத்துடன் கூடிய மனநிலை.

compound : கூட்டுப்பொருள்; சேர்வை; சேர்மம்; சேர்வு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவுகளில் வேதியியல் முறையில் ஒருங்கிணைந்து, புதுப்பண்புகளுடன் உருவாகிய புதிய கலவைப் பொருள்.

compounder: மருந்து கலப்பவர்.

comprehension : உணர்வாற்றல்; புரிகை : பொருள்களையும் உறவு நிலைகளையும் புரிந்து கொள்ளும் திறன்.

compress : கட்டுத்துணி; அழுத்து; அடுக்குக்கட்டு; அமுக்கு : வீக்கம் அடைவதற்கு நீர்த் தடையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்து உறுப்புகளுக்கு அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி.