பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

confabulation

328

congenital


கற்றையினை மையப்படுத்துவதற்கு உதவுகிற, நீள் உருளைக் கட்டமைப்புடைய இருபுறமும் திறந்த ஒரு கூம்பு.

confabulation : நினைவழிவு : அண்மை நிகழ்வுகள் பற்றிய நினைவு அழிந்துபட்டிருக்கும் போது ஏற்படும் குழப்பமான நிலை. இந்நோயாளி தமது நினைவில் ஏற்படும் குறைபாட்டினைத் தமது சொந்தப் புனைவுகளால் நிரப்பிக் கொள்கிறார். அந்தப் புனைவுகள் உண்மை எனவும் நம்பிவிடுகிறார்.

confection : இனிப்பான மருந்துக் கலவை; லேகியம்; திண்பொருள் : சர்க்கரை, பாகு, தேன் ஆகியவற்றுடன் மருந்துகளை கலத்தல்.

confidentiality : மந்தன உரிமை : ஒருவர் ஒரு தொழிலாற்றுநரின் (மருத்துவரின்) அறிவுரைகளையும் உதவியையும் இரகசியமாக நாடி இருக்கலாம். அவர் அந்தச் சூழ்நிலையில் எவ்வாறு நாடினார் என்ற தகவல்களை அத்தொழிலாற்றுநர் பகிரங்கமாக வெளியிடாமல் இருப்பதற்கு அவருக்குள்ள உரிமை.

configuration : வடிவமைதி : 1. உடல் மற்றும் அதன் உறுப்புகளின் பொதுவான வடிவ அமைப்பு. 2. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அணு அமைதி.

conflict: மனப்போராட்டம்; உளப் போராட்டம்; சச்சரவு : ஒன்றுக் கொன்று மாறான அல்லது முரண்பட்ட இரு விருப்பங்கள் அல்லது உணர்ச்சி ஒருங்கே இருக்கும் மனநிலை. மனப் போராட்டம் கடுமையாகும் போது விருப்பங்களை அடக்குதல் நடைபெறுகிறது. மனப் போராட்டமும் விருப்பங்களை அடக்குதலும் பல்வேறு நரம்புக் கோளாறுகளுக்கு முக்கிய மாக மனக்குழப்ப நோய்க்குக் (ஹிஸ்டீரியா) காரணமாகும்.

confluence : திரடிசி; குவி திறன் கூடல் : அடுத்தடுத்துள்ள கொப் புளங்கள் அல்லது பருக்கள் ஒன்றாக இணைந்து திரட்சியடைதல்.

conformation : கட்டமைப்பு : 1. ஒர் உறுப்பின், உடலின் அல்லது பொருளின் வடிவம் அல்லது உருவமைப்பு. 2. நிரப்பிடத்தில் ஒரு மூலக்கூறின் முப்பரிமாண வடிவமைதி.

confusion : மனக்குழப்பம்; குழப்பம் : இயல்பு நிலைக்கு ஒவ்வாத ஒரு குழப்பமான மன நிலை. பல்வேறு உணர்ச்சிகள் ஒன்றுகலப்பதால் இது உண்டாகிறது. பல்வேறு நோய்களின்போது இது உண்டாகிறது.

congenital : பிறவி நோய்; பிறவிக்குறை; பிறப்பு நோய் :