பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

congestion

329

Contact


பிறவியிலேயே அமைந்த நோய்கள் பெரும்பாலும் மரபணுக் கோளாறுகளினால் உண்டாகிறது.

congestion : குருதித் தேக்கம்; குருதியோட்டத் தேக்கம் : குருதி மட்டுமீறிய அளவில் செறிவு கொண்டிருத்தல். நெஞ்சுப் பைக்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையில் தடை ஏற்படுவதால் இது உண்டாகிறது.

congestive heart failure : குருதித் திரட்சி இதயக்கோளாறு : இதயத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இதயக் கீழறைகளிலிருந்து போதிய அளவு இரத்தம் வெளிப்படுவதைப் பராமரிக்க இதயத்தினால் இயலாதிருத்தல். இதனால் அளவுக்கு மீறிய குருதித் தேக்கம்-திரட்சி ஏற்படுகிறது.

conglutinant : ஒட்டுப்பசை : ஒரு காயத்தை ஒட்டி இணைத்துக் குணப்படுத்தும் பசைப்பொருள்.

conicotine : கானிக்கோட்டின் : நிக்கோட்டின் எனப்படும் புகையிலை நஞ்சின் ஒரு வளர்சிதை வினைமாற்றப் பொருள். இது கடைசியாகச் சிகரெட் பிடித்த ஒரு வாரம் வரை இரத்தவோட்டத்தில் கண்டறியக்கூடிய அளவுக்கு நிலைத்திருக்கும்.

coning : கானிங் : 1. மூளையின் பாகங்கள் அதன் பல்வேறு அறைகளுக்கிடையே இடம் பெயர்தல். இது கன்னப்பொட்டெலும்பு கட்டிப்புண் வீக்கம் காரணமாக உண்டாகிறது. 2. பெருமூளைக்கும் சிறு மூளைக்குமிடையில் நீண்டுள்ள புறச்சவ்வு வழியாகக் கன்னப் பொட்டெலும்பு மடல்கள் கீழ் நோக்கி இடம் பெயர்தல். 3. எலும்புப் பெரும் புழை வழியாகச் சிறுமூளை அடிச்சதை கீழ்நோக்கி நகர்தல்.

coniofibrosis : தூசுக் குலைக் காய்ச்சல் :தூசு காரணமாக உண்டாகும் குலைக்காய்ச்சல். இதனால் நுரையீரல் அழற்சி ஏற்படும்.

conjugate : இணைவு : 1. இணையாக்கப்பட்ட அல்லது பிணைக்கப் பட்ட 2. வேதியியல் இணைவு காரணமாக உண்டாகும் ஒரு விளைபொருள். 3. இடுப்பு எலும்பு வாயிலின் இணைப்பு விட்டம் இடுப்படி முட்டு முக்கோண எலும்பு (புனித எலும்பு) முதல் பொது எலும்புக் கூட்டுக்கணு வரையிலான தூரம்.

conjugation : இணைவாக்கம் : 1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம்.