பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

conjunctiva

330

consolidation


conjunctiva : இமை இணைப்படலம்; கண் சவ்வு : புற இமை யையும் விழிக் கோணத்தையும் இணைக்கும் படலம்.

conjunctivitis : இமை இணைப் படல அழற்சி; கண் சவ்வழற்சி : இமை இணைப்படலத்தில் ஏற்படும் வீக்கம். சுகாதார வசதிகள் மிகக்குறைவாக உள்ள நாடுகளில் அதிகமாக உண்டாகிறது.

connation : இணையுறுப்பு ஒட்டம் : இணையொத்த உறுப்புகள் பிறப்பி லேயே ஒட்டிக் கொண்டிருத்தல்.

conn syndrome : குண்டிக்காய்க் கழலை : குண்டிக்காய்ப் புறப் பகுதியில் ஏற்படும் கழலைக் கட்டி. இதனால், மட்டுமீறிய குருதி அழுத்தம், தசை வலிமைக் குறைவு ஏற்படுகிறது.

conn's syndrome : 'கோன்' நோய் : அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இழக்கப் படுகிறது. இதனால் தசைப் பலவீனம், உயர்இரத்த அழுத்தம், மிகைச்சிறு நீர்ப்போக்கு, பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது. அமெரிக்க மருத்துவ அறிஞர் ஜே. கோன் என்பவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

conotrane : கோனோட்ரான் : சிலிக்கோன், பெனோட்ரோன் அடங்கிய களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.

consanguinity : மரபுவழி உறவு; தொடர் உறவு : குருதிக்கலப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையிலான உறவு. இது ஒரு தாய் மக்களுக்கும், தொலை உறவினர்களுக்குமிடையில் மாறுபட்டிருக்கும்.

conscience : மனசாட்சி : ஒருவர் தனது செயல்களும் உணர்வுகளும் சரி அல்லது தவறு என்று அறிந்து கொள்ளும் உணர்வு.

consciousness : உணர்வுநிலை : மனம் செயற்படும் நிலை; மனத் தின் விழிப்பு நிலை; மனம் அரைகுறையான தெளிவு நிலையில் இருத்தல் நனவு.

consent : இசைவளிப்பு : ஒரு நோய்ச் சிகிச்சைக்கு அல்லது நோய் கண்டறியும் நடை முறைக்கு உள்ளாவதற்கு நோயாளி இசைவளிக்கிற ஆவணம் அல்லது வாய்வழி ஒப்பளிப்பு.

conservative treatment : பராமரிப்பு மருத்துவ முறை : தீவிர முறைகளைக் கையாளாமல் ஒரு நோய் மோசமடையாமல் தடுக்கும் சிகிச்சை முறை இது பாரம்பரியமாக ஒப்புக் கொள்ளப்பட்ட முறை.

consolidation : திடமாக்கும் மருத்துவம்; திட்ட மருத்துவம்;