பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

corectopia

336

corny


corectopia : திரிபிடக்கண்மணி : கண்ணின்மணியின் அமைப்பு விழித்திரையின் மையத்தில் அமைந்திருப்பதற்குப் பதிலாக விசித்திரமான இடத்திலமைந்து இருத்தல்.

core dialysis : உள்மையப்பகுப்பு : இழை உறுப்பிலிருந்து விதித் திரைப்படலத்தின் வெளிவிளிம்பை அறுவைச் சிகிச்சை மூலம் பிரித்தல்.

corelysis : இணைப்புப் பிளப்பு : விரியாடியின் பொதியுறைக்கும் விழித்திரைப் படலத்துக்கு மிடையிலான இணைப்பினை பிளவுறுத்துதல்.

coremorphosis : கண்மணி உருவாக்கம் : ஒரு செயற்கைக் கண்மணியை அறுவைச் சிகிச்சை முறைப்படி உருவாக்குதல்.

coreoplasty : கண்மணி திரிபுநீக்கச் சிகிச்சை : திரிபடைந்த அல்லது புழை அடைப்புடைய கண்மணியை அறுவைச் சிகிச்சை மூலம் திருத்தி அமைத்தல்.

corlan : கார்லான் : கோர்ட்சால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

corn : காய்ப்பு; தோல் காய்ப்பு; ஆணி விழுதல்; கால் ஆணி : காலடியிலோ கால் விரலிலோ மிகுந்த உராய்வு அல்லது மட்டு மீறிய அழுத்தத்தால் ஏற்படும் மேல்தோல் தடிப்பு.

cornea : விழி வெண்படலம்; கருவிழி; ஒளிப்படலம் : விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம்.

corneal graft : கருவிழிப்படல மாற்று மருத்துவம்; கருவிழிச் சீரமைவு; கருவிழி ஒட்டு : ஒளி ஊடுருவாத விழிவெண் படலத்தை மாற்றிவிட்டு, வேறொருவரின் ஆரோக்கியமான விழிவெண்படலத்தைப் பொருத்துதல்.

corneoplasty : கருவிழிப்படல மாற்றுச் சிகிச்சை : விழிவெண் படலத்தை மாற்றிப் பொருத்துவதற்கான அறுவைச் சிகிச்சை.

corneosclera : கருவிழிப்புறப் படலம் : கண்விழியின் புறத் தோலாக விழிவெண்படலமும், வெள்விழியும் அமைந்திருத்தல்.

corny : கால் காய்ப்பு நோய் ; காலில் தோன்றும் காய்ப்பு தன்மை காலில் காய்ப்பு நோயுடைய