பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coronary

337

corrective


coronary : நெஞ்சுப்பை சார்ந்த : 1. மகுடம் போன்ற அல்லது மகுடத்துக்குரிய. 2. நெஞ்சுப்பைச் சுவரின் தசைக்குக் குருதி வழங்கும் நாளங்களைக் குறிப்பிடும் சுற்று உறுப்பு.

coronary arteries : நெஞ்சுப்பை நாளம் ; இதயம் சார் : நெஞ்சுப்பைச் சுவரின் தசைக்கு இரத்தம் வழங்கும் நாளம் (தமனி) இது மகுடம் போல் சுற்றியிருக்கும்.

coronary circulation : நெஞ்சுப்பைக் குருதியோட்டம் : நெஞ்சுப் பையைச் சுற்றி இரத்த ஒட்டம்.

corona viruses : மகுடக்கிருமிகள் : புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ள ஒரு நோய்க் கிருமிக் குழுமம். இது தடுமனை உண்டாக்குகிறது.

coroner : பிண ஆய்வாளர் : இங்கிலாந்தில் வன்முறை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டிருக்கும் என ஐயுறப்படும்போது மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காகச் சடலத்தை ஆராயும் ஒர் அதிகாரி. இவர் பொதுவாக, நெஞ்சுப்பை நாளம் மெய்யம் ஒரு வழக்குரைஞராகவோ, மருத்துவராகவோ இருப்பார்.

coronoidectomy : கீழ்த்தாடை எலும்பு அறுவைச் சிகிச்சை : பாலூட்டி உயிரினங்களின் கீழ்த் தாடையிலுள்ள காக்கையின் அலகுபேர்ல் வளைந்த எலும்புப் பகுதிகளை அறுவைச் சிகிச்சை முறையில் அகற்றுதல்.

corporeity : பரு உடல் : பரு உடலியல்பு.

corpse : உயிரிலா மனிதஉடல் : சவம்.

corpulmonale : இதய கீழறை மிகு அழுத்தம் : நுரையீரல் நோயைத் தொடர்ந்து ஏற்படும் இதயநோய். இதனால், வலது இதயக் கீழறையில் அழுத்தம் அதிகமாகிறது.

corpus : உடலி; பிணம் (சடலம்); உடல் சிறப்புத் திசு உறுப்பு : உடம்பில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு.

corpuscle : சிற்றுடலி; குருதிக்கணம்; இரத்த அணு; சிறு மெய்யம்; குறுதியணு : குருதியில் உள்ள நுண் அணுவுடலி. இது பொதுவாக, இரத்தச் சிவப் பணுக்களையும், வெள்ளணுக் களையும் குறிக்கிறது.

corrective : தீங்கு தவிர்க்கும் பொருள்; செப்பமான : தீங்கினை எதிர்த்து இயங்கும் தன்மையுடைய பொருள்.