பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cream of tartar

343

cricothyreotomy


cream of tartar : இருபுளியகி : பொட்டாசியம் பைடார்ட்ரேட், மருந்துக்குப் பயன்படும் வகையில் புடமிட்டு மணியுருப்படுத்திய சாம்பர இரு புளியகி.

creatine : தசைச்சாற்று உயிர்ப் பொருள்; தசைப்புரதம் : தசையின் சாற்றில் காணப்படும் உயிர்ப் பொருள் மூலக்கூறு முதுகெலும் புள்ளவற்றுக்குரிய வரிநிலைத் தசையின் நிலையான தனிச் சிறப்புக்கூறு.

creatinuria : மிகைத்தசைப் புரதப் போக்கு : சிறுநீரில் கிரியோட்டின் என்ற தசைப்புரதம் அதிக அளவில் வெளியேறுதல்.

creatorrhoea : தசைஇழைமப் போக்கு : கடும் கணைய அழற்சி யின்போது மலத்துடன் தசை இழைமங்கள் வெளியேறுதல். இதனை நுண்ணோக்கி மூலம் காணலாம்.

creosote : நச்சரிபொருள் : மரக்கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவிலான ஆற்றல் வாய்ந்த நச்சரிபொருள்.

crepitation : குறு குறு ஒலி; (எலும்பில்) நரநரப்பு; உராயொலி; உரம் ஒலி : உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி.

cresol : கிரிசோல் : ஆற்றல் வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்து. வேதியியல் முறையில் ஃபினாலுடன் தொடர்புடையது.

crest : எலும்பு முகடு : எலும்பின் மீதுள்ள ஒர் எடுப்பான வரை முகடு.

cretinism : அங்கக்கோணல் : கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த தலை மயிர் வீங்கிய கண் இமைகள், குறுகிய கழுத்து போன்ற அங்கக் கோணல்கள் ஏற்படுதல்.

crevicular : வெடிப்புசார்ந்த : ஒரு வெடிப்பு-குறிப்பாக பல்லெயிறு வெடிப்பு-தொடர்பான.

cribriform : சல்லடைத்துளை எலும்பு; சல்லடைக்கண்; சல்லடை : சல்லடை போல் சிறுதுளைகளுள்ள முக்கடி எலும்பு. இது முகர்தல் நரம்புகள் செல்வதற்கு அனுமதிக்கிறது.

crick : கழுத்து சுழுக்கு : முதுகுப் பிடிப்பு.

cricothyroid : குருத்தெலும்புக் கீறல் : குரல்வளைக் குருத்தெலும்பு, கேடயக் குருத்தெலும்புக் குருத்துகளின் வழியாகக் கீறல்.

cricothyreotomy : குருத்தெலும்பு சவ்வுக்கீறல் : தோல் மற்றும் கேடயக் குருத்தெலும்புச் சவ்வு வழியாகக் கீறுதல். இது மூச்சடைப்பை நீக்குவதற்குச் செய்யப்படுகிறது.