பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cricoid

344

crotamiton


cricoid : குரல்வளைக் குருத்தெலும்பு : மோதிர வடிவமுள்ள குரல்வளைக் குருத்தெலும்பு.

crisis : நோய்த்திருப்புமுனை; அச்சநிலை; இடர்நிலை : ஒரு நோயில் ஏற்படும் திருப்புக் கட்டம். எடுத்துக்காட்டாக, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வதற்கு வெப்பத் தணிவு ஏற்படுதல்.

crohn's disease : குரோஹன் நோய் : சிறு குடல் வீக்கம். பொதுவாகக் கடைச்சிறுகுடல், பெருங்குடலின் வலப்பக்கம், இரைப்பையின் சுவர் முழுவதும் வீக்கமடைந்து இது ஏற்படுகிறது. நீளமான வெடிப்புகளாக நைவுப் புண்கள் உண்டாகும். இரத்தத்துடனான மலப்போக்கில் இது காணப்படும். பி. குரோஹன் என்ற அமெரிக்க மருத்துவ அறிஞரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

crookback : கூன் : கூன் விழுந்த; கூனல் முதுகு.

crop-bound : உணவடைப்பு : தொண்டைப் பை இறுக்கத்தால் துன்பமடைகிற.

cross bite : பல் திரிபு : பற்கள் இயல்புமீறி விலகுவதால் அல்லது தாடை இயல்பு மீறி இடம் பிறழ்வதால் மேல், கீழ் பற்கள் இயல்புமீறி ஒன்றின் மேல் ஒன்று படிந்திருத்தல்.

cross breeding : இனக் கலப்பு : வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளை அல்லது தாவரங்களைக் கலப்பு செய்தல்.

cross eye : ஓரக்கண் : கண்ணின் பார்வை அச்சு மற்ற கண்ணிலிருந்து விலகி ஏற்படும் இரட்டைப் பார்வைக்கோளாறு.

cross leg flap : சப்பணத் தோல் மடிப்பு : பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யும்போது மற்ற காலின் தோல்மடிப்பைப் பயன் படுத்துதல்

cross reactivity : குறுக்கு எதிர் விளைவு : பல்வேறு காப்பு மூலங்களுடனான தற்காப்பு மூலத்தின் எதிர்விளைவு.

cross resistance : குறுக்கு தடையாற்றல் : ஒரு மருந்துக்கான எதிர்ப்பாற்றலை வளர்க்கிற உயிரிகள். இது ஒரே மாதிரியான பிற மருந்துகளுக்குத் தானாகவே எதிர்ப்பாற்றல் பெறுகிறது.

crossing over : டிஎன்ஏ பைரிமாற்றம் : முதலாவது கரு முனைப் பகுப்பின் தொடக்க நிலையில் ஒவ்வொரு இனக்கீற்று உறுப்பினர் களிடையே டி.என்.ஏ. நீட்சிகளின் பரிமாற்றம் நடைபெறுதல்.

crotalidae : சங்கிலிக்கறுப்பன் பாம்பு : நச்சுப்பாம்புகளின் ஒரு குடும்பம், வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முன்வளையங்களுடன் கூடிய நச்சுப் பாம்பு வகை.

crotamiton : குரோட்டாமிட்டோன் : சொறி சிரங்கினை குறிப்பாகக் குழந்தைகளின் சொறி சிரங்கினைக் குணப்படுத்துவதற்கான மருந்து. இது சொறி சிரங்கில் பூச்சிகளைக் கொன்று, எரிச்சலைத்தடுக்கிறது.