பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

croup

345

cryopreservation


croup : காற்றுக்குழல் அழற்சி : கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக் குழல் அழற்சி நோய். தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி.

crouzon's disease : குரூசோன் நோய் : பிறவியில் உண்டாகும் ஒரு நோய். இதில் தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித்தலை போன்ற மிகைமண்டைத் திரிபு, கண்விழிப்பிதுக்கம், பார்வை நரம்பு சூம்புதல் போன்ற கோளாறுகள் உண்டாகும். ஆக்டேவ் குரூசோன் என்ற ஃபிரெஞ்சு நரம்பியல் வல்லுநரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

cruels : கண்டமாலை நோய்.

crus : வேர் உறுப்பு : உடலின் பல்வேறு உறுப்புகளில் கால் போன்ற அல்லது வேர் போன்ற அமைப்பு. எடுத்துக்காட்டாக, உதாரவிதான வேர்.

crutch palsy : கவட்டு வாதம்; ஊன்றுகோல் : மணிக்கட்டு, விரல்கள், கட்டைவிரல்கள் ஆகியவற்றின் நீட்டுத் தசைகளில், அக்குளில் உள்ள ஆரை நரம்புகளில் அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக உண்டாகும் முடக்குவாதம்.

cryaesthesia : குளிர் உணர்வு : குறைந்த வெப்பநிலையில் மிகுந்த குளிர்ச்சியை உணர்தல்.

cryoablation : குளிர்நிலை திசு அகற்றல் : அபரிமிதமான குளிர்ச்சி மூலம் அழிப்பதன் வாயிலாக திசுவை அகற்றுதல்.

cryogenics : தாழ்வெப்பவியல்; உறைநிலையியல் : தாழ்ந்த வெப்பநிலை பற்றிய இயற்பியலின் கிளைத்துறை.

cryoglobulinaemia : மிகைக்கிரையோகுளோபுலின் : இரத்தத்தில் கிரையோகுளோபுலின் அளவு மட்டுமீறி இருத்தல்.

cryoglobulins : கிரையோ குளோபுலின் : சில நோய்களின் போது இரத்தத்தில் இயல்புக்கு மீறிய அளவில் புரதங்கள் அடங்கியிருத்தல். இவை தாழ்ந்த வெப்பநிலையில் கரைவதில்லை. இதனால் விரல்கள், பாதங்கள் போன்ற சிறிய இரத்த நாளங்களில் தடை ஏற்படுகிறது.

cryopexy : குளிர்முறைப் பாது காப்பு; குளிர்பொருத்தல் : தாழ்ந்த வெப்பநிலை உண்டு பண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு.

cryophake : உறைமுறைப் புரை நீக்கம் : உறையவைக்கும் முறை மூலம் கண்ணில் புரையை நீக்குதல்.

cryoprecipitate : குளிர்நிலை வீழ் படிவு : குருதி நீரிலிருந்து கிடைக்கும் கரையக்கூடிய ஒரு பொருள். இது குளிர்விக்கும் போது வீழ்படிவாகக் கிடைக்கிறது. இதில் காரணி-VIII மிகுதியாக இருக்கிறது.

cryopreservation : குளிர்நிலைப் பாதுகாப்பு : மிகவும் தாழ்ந்த