பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cupping-class

348

curvidentate


cupping-class : இரத்த உறிஞ்சு கருவி : காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் மூலம் இரத்தம் உறிஞ்சும் கருவி.

cupula : கிண்ண அடைப்பு : அரை வட்ட மென்குழல்களின் கடைப் பகுதியை அடைத்துக்கொள்ளும் கிண்ண வடிவ அமைப்பு.

cupulometry : ஊடு தாய்க் குழாய்ச் சோதனை : ஊடு தாய்க் குழாய் செயற்படுவதைச் சோதனை செய்யும் முறை. இதில் நோயாளியை ஒரு சுழல் நாற்காலியில் உட்கார வைத்து வேகமாகச் சுழற்றப்படுகிறது. சுழற்சிக்குப் பிந்திய தலைச் சுற்றலும், விழி நடுக்கமும் வரைபடத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

curare : ஊக்க அழிவு நஞ்சு; தாவர நச்சுச்சாறு : அரளி போன்ற தென் அமெரிக்கச் செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் கொடிய நஞ்சு வகை.

curarine : அயர்வு நீக்க மருந்து : வேர் வகையிலிருந்து எடுத்து அறுவை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன் படுத்தப்படும் கொடிய நச்சு மருந்து.

cure : குணப்படுத்துதல் : 1. நோய் நீக்குதல்; குணமடையச்செய்தல். 2. மீண்டும் உடல் நலம் பெறச்செய்தல். 3. ஒரு நோயைக் குணப்படுத்துவதில் பயனுள்ள மருந்து.

curer : நோய் நீக்குநர் : குணமாக்குபவர் ; மருத்துவர்.

curettage : சுரண்டு மருத்துவம்; வழித்தெடுத்தல்; சுரண்டுதல்; திருகியம் : உட்குழிவிலுள்ள மிகையான அல்லது ஆரோக்கிய மற்ற திசுவினை சுரண்டு கருவியினால் சுரண்டி எடுத்தல்.

curette : சுரண்டு கருவி; கருப்பை வழிப்பி; சுரண்டி : உட்குழிவுகளி லுள்ள ஆரோக்கியமற்ற திசுக்களைச் சுரண்டி எடுப்பதற்கு அறுவை மருத்துவர் பயன் படுத்தும் சிறிய சுரண்டு கருவி.

curettings : சுரண்டு பொருள் : உட்குழிவுகளிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பொருள். இது நோயினைக் கண்டறிவதற்காகப் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

curie : கியூரி : கதிர்வீச்சு அலகு. ஃபிரெஞ்சு விஞ்ஞானிகள் பியர் கியூரி, மேரி கியூரி ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

curling's ulcer : சிறுகுடல் புண் : பரவலான தீப்புண் அல்லது ஆவிப்பொக்குளங்கள் காரணமாக, இரைப்பையில், அல்லது முன் சிறுகுடலில் உண்டாகும் சீழ்ப்புண்.

curvicastate : வளைவு விலா எலும்பு : வளைந்த விலா எலும்புகளுள்ள.

curvidentate : வளை பல் : வளைவான பல்.