பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cystectomy

353

cystitis


வழி ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்து.

cystectomy : சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம் : சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாக அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

cysteine : சிஸ்டைன் : கந்தகம் அடங்கியுள்ள ஓர் அமினோ அமிலம். சீரணத்தின்போது புரதங்களைச் சிதைப்பதால் இது உற்பத்தியாகிறது.

cystic : சிறுநீர்ப்பைக்குரிய : பித்தப்பைக்குரிய.

cysticercosis : தோலடிக்கட்டி : எலும்புத்தசை, மூளை, தோலடித் திசு ஆகியவற்றில் நாடாப் புழுவின்-முட்டைப் புழுவின் உறையினால் உண்டாகும் நோய். இது தோலுக்கடியில் பட்டாணி போன்ற உருண்டைக் கட்டிகளை உண்டாக்கும். இழுப்பு நோயையும் ஏற்படுத்தும்.

cysticercus : முட்டைப்பருவ குடற்புழு : குடற்புழுவின் முட்டைப் புழுப்பருவம். இது மண்டையோட்டுத் தசைகளிலும் மூளையில் திரண்டு, காக்காய் வலிப்பு நோயை உண்டாக்குகிறது.

cystic fibrosis : மிகுவியர்வைச் சுரப்பு : ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைப்பகுதியிலுள்ள வெள்ளை இமைகளுக்குப் பொதுவாக ஏற்படும் ஒரு மரபு நோய். இந்நோய் கண்டவர்களுக்கு புறத்தோல் சுரப்பிகளில் அளவுக்குமீறி சுரப்பு நீர் சுரக்கும். கனமான சளி, உள் உறுப்புச் சுரப்பிகளில் தடை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக வியர்வை சுரந்து வியர்வையிலுள்ள குளோரைடு அளவை அதிகரிக்கும்.

cystine : சிஸ்டைன் : சீரணம் நடைபெறும்போது புரதங்கள் சிதைவதனால் உண்டாகும் அமினோ அமிலம் அடங்கிய ஒரு கந்தகம். இது சிஸ்டோனின் இரு மூலக்கூறுகளாக எளிதாகப் பகுக்கப்படுகிறது.

cystionsis : சிஸ்டைன் படிவு நோய் : படிக சிஸ்டைன் உடலில் படிகிற ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு. இது மரபாக வரும் நோய். இந்நோய் கண்டவர்களுக்குச் சிறுநீரில் சிஸ்டைனும், பிற அமினோ அமிலங்களும் சுரக்கும்.

cystinuria : சிறுநீர் சிஸ்டைன் : சிறுநீரில் சிஸ்டைனும், பிற அமினோ அமிலங்களும் சுரக்கும் ஒரு வளர்ச்சிதை மாற்ற நோய். இது சிறுநீரகக் கல் ஏற்படக் காரணமாகிறது.

cystitis : சிறுநீர்ப்பை அழற்சி; திசுப்பை அழற்சி : சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது.