பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் முதன்மை பெற்று விளங்குபவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். பல நுண்ணிய நவீன கருத்துக்களையும் தமிழில் கூற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். இதன் மூலமாகப் புதிய தமிழ்ப் பதங்களையும் உருவாக்கித் தமிழின் வளத்தைப் பெருக்கி வருகிறார் திரு. மணவை முஸ்தபா.

இதோடு திருப்தியடையாமல் தமிழில் அறிவியல், தொழில்நுட்ப நூல்களை பலர் எழுதுவதற்கு உதவும் முறையில் பல கலைச்சொல் களஞ்சியங்களைப் பெருமுயற்சியுடன் சிறந்த முறையில் வெளியிட்டு வருகிறார். தற்போது மருத்துவக் களஞ்சிய அகராதியை வெளியிட்டுள்ளார். இக்களஞ்சிய அகராதி தமிழில் பல மருத்துவ நூல்கள் வெளிவர உதவும் என நம்புகிறேன்.

திரு. மணவை முஸ்தபா அவர்கட்கு எனது நல்வாழ்த்துக்கள்.


சி. சுப்பிரமணியம்
(மருத்துவக் கலைச்சொல்
களஞ்சிய அகராதி
நூல் வாழ்த்துரை)