பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dacrocystography

Dalton's law


dacrocystography : கண்ணீர் நாள ஊடுகதிர்ப்படமெடுத்தல்; கண்ணீர்ப்பை வரைவியல் : கண்ணீர் வழியும் நாளத்தை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் படம் எடுத்து ஆராய்தல்.

dacryocystorhinostomy : மூக்கினுள் கண்ணீர் வடிய அறுவை மருத்துவம்; கண்ணீர்ப் பை-நாசி வழிதிறப்பு : மூக்குக் கண்ணிர் நாளத்தில் தடங்கல் ஏற்பட்டிருக்கும்போது, கண்ணீர்ப்பையிலிருந்து மூக்கினுள் கண்ணீர் வடியுமாறு செய்வதற்கான அறுவை மருத்துவம்.

dacryocystotomy : கண்ணீர்ப்பை கிழிப்பறுவை; கண்ணிர்ப்பை கிழிப்பு : கண்ணிர்ப்பையைக் கிழித்தல்.

dacryo : கண்ணீரின்; கண்ணீருக்குரிய; கண்ணீர்ப்பைக்குரிய, கண்ணீர் நாளம் தொடர்பான.

dacryolith : கண்ணீர் பாதைக் கட்டி; கண்ணீர்க்கல் : கண்ணீர் வழியும் பாதைகளில் கட்டி உண்டாதல்.

dacryops : கண்ணீர் ஒழுக்கு : கண்ணிலிருந்து நீர் ஒழுகும் நிலை. கண்ணிர் குழல் தளர்ச்சி. அடையும் போது, இந்த நிலைமை ஏற்படும்.

dacryorrhoea :கண்ணீர் மிகைப்பு : கண்ணிலிருந்து அளவுக்கு அதிகமாகக் கண்ணிர் வடிதல்.

dactyl : விரல் : கால் விரல்.

dactylon : இடைத்தோல் இணைப்பு விரல்; ஒட்டிய விரல்கள்; கூட்டு விரல் : வாத்தின் கால் விரல்கள் போன்று இடைத்தோலால் ஒன்று பட்டிணைந்த விரல்கள்.

dactylitis : விரல் வீக்கம்; விரல் அழற்சி : விரல் அல்லது கால் விரல் வீக்கம். எலும்புகளை முடியுள்ள சவ்வு வீங்குவதால் விரல் வீங்குகிறது. பிறவி மேக நோய், காச நோய் போன்ற.

dactylography : கைரேகை ஆராய்ச்சி : கை ரேகைகளின் அமைப்பு வடிவம், எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிமேற் கொள்வது.

dactylogryposis : விரல் முடக்கம்; விரல் வளைவு : கை அல்லது கால் விரல்கள் நிரந்தரமாக வளைந்துவிடுவது. தொழு நோய் பாதிப்பால் விரல்கள் வளைவது.

dactylology : விரல் சைகை மொழி; விரல்மொழி : ஊமைகள் செவிடர்களுடன் பேசுவதற்குப் பயன்படும் விரல் சைகை மொழி.

dactylolysis : விரல் இழப்பு; விரல் நீக்கம்; விரல் அகற்றுதல் : விரலை நீக்குதல்; விரலை வெட்டி விடுதல், அறுவை மருத்துவம் மூலம் விரலை சரிசெய்தல்.

dairy : பாற்பண்ணை.

dalkon shield : டால்கன் மூடி : பெண்களுக்கான கருத்தடைப் பொருள்; கருப்பைக்குள் வைக்கப்படும் கருத்தடைப் பொருள்.

Dalton's law : டால்கன் விதி.