பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dartos

361

daunorubicin


களால் அழிக்கப்பட்ட டி.என்.ஏ. தனக்குரிய நொதிப் பொருள்களால் சீராக்கிக் கொள்ளுதல்.

dartos : டார்ட்டாஸ் தசை; விரைப்பைச் சுருங்குதசை : விரைப்பையின் கீழ்ப்பகுதியில் உள்ள சுருங்கு தசை விரைகளின் வெப்பநிலையை சமப்படுத்துவதற்கு இத்தசை உதவுகிறது.

Darwinism : கூர்தல்வாதம்/உயிர் மலர்ச்சிக் கோட்பாடு : சார்லஸ் டார்வின் (1809 - 82) ஆராய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு. உயிர்கள் தங்கள் சூழ்நிலையில் உயிர் வாழ்வதற்குத் தங்களைச் சிறந்த முறையில் தகவமைத்துக் கொண்டு வளர்சிதை மாற்றம் பெற்று பரிணாமம் பெறுகின்றன என்று கூறுவது படிமலர்ச்சிக் கோட்பாடாகும்.

darwin's stubercle : டார்வின் எலும்புப் புடைப்பு : காதின் மேலுள்ள எலும்புப் புடைப்பு. இது மனிதரிடம் சிறிதாகவும் குரங்குகளிடம் பெரிதாகவும் இருக்கும்.

darwinian theory : டார்வினியக் கோட்பாடு : "அனைத்துப் பிராணி களின் வழித்தோன்றல்களும் தங்கள் பெற்றோர்களிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும்" என்று சார்லஸ் டார்வின் (1809-1882) வகுத்த உயிர் மலர்ச்சிக் கோட்பாடு எனும் படி மலர்ச்சிக் கொள்கை அவ்வாறு மாறுபட்ட வழித் தோன்றல்களில் தங்கள் சூழல்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் உடையவை உயிர் வளர்கின்றன; மற்றவை இறந்து விடுகின்றன.

dash board fracture : உந்து பலகை முறிவு : முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் முன்னோக்கி வீசப்படுவதால் அவரது இடுப்பு மூட்டு நழுவி துண்டாகி எலும்பு முறிவு ஏற்படுதல்.

daughter cell : சேய் உயிரணு : உயிரணு பகுபடுவதன் மூலம் உண்டாகும் உயிரணு. தாய் மூலக்கூறு கதிரியக்கத்தில் சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நியூக்ளைடு.

data : தரவு; தகவல்; விவரம்.

daunorubicin : டாக்னோரூபிசின் : டாக்சோரூபிசின் போன்றது. கடுமையான வெண்குட்டத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இது டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலம் (DNA) உண்டாவதை