பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deaf

363

Debendox


மணிநேரத்துக்கு மேல் இருப்ப தால் உண்டாகும் ஒரு நோய்.

deaf : செவிடு; காது மந்தமான; கேளாத; கேள் உணர்வின்மை : 1. செவியால் கேட்க இயலாத நிலை. 2. கேட்க விரும்பாத நிலை.

deafaid : காது கேட்கும் கருவி : செவித்துணைக் கருவி.

deaf and dump : செவிட்டூமை.

deaten : பேரொலி; செவி அதிர்வொலி : கூச்சலினால் காதடைக்கச் செய்தல்.

deofening : ஒலித்தடை : ஒலித்தடைப் பொருள்.

deaf mute : செவிட்டூமை; பேச்சுக் கேள் உணர்வின்மை; கேட்பு பேச்சுப்புலன் இன்மை : பேசவும், கேட்கவும் இயலாத நிலைமையில் உள்ளவர்.

deaf mutism : செவிட்டு ஊமை; கேட்புப் பேச்சுப் புலனின்மை : ஒருவர் வாயால் பேசவும், செவியால் கேட்கவும் இயலாத நிலைமையில் இருத்தல்.

deatness : செவிடு; செவிட்டுத் தன்மை; கேட்புத் திறனின்மை; கேளாமை : கேட்கும் சக்தியை முழுவதுமாக அல்லது பகுதியாக இழந்து போன நிலை.

deamination : அமினோ நீக்கம் : அமினோ அமிலங்கள் போன்ற கரிமக்கூட்டுப் பொருள்களில் இருந்து அமினோ பொருள்களை அகற்றுதல்.

dearticulation : மூட்டு நழுவல் : மூட்டு தன்னுடைய இயல்பான இடத்திலிருந்து நழுவி விடுதல் அல்லது நகர்ந்து விடுதல்.

death : இறப்பு (சாவு); மரணம்; சாதல்; மாள்வு; உயிர் நீத்தல் : உடலின் இன்றியமையாத இயக்கங்கள் நின்றுபோதல். பொதுவாக நாடித் துடிப்பு நின்றுவிடுதல். சுவாசம் இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகளால் இது கணிக்கப்படுகிறது. மூளைத்தண்டு இறுதியாகவும் குணப்படுத்த முடியாத அளவுக்கும் சேதமடைந்திருந்த போதிலும் எந்த முறைச் சுவாசத்தினாலும் இன்றியமையாத இயக்கங்கள் நடைபெறலாம். எனவே, மரணத்தைக் கண்டறிய கடுமையான சோதனைகள் நடத்தப்படுகின்றன.

death-agony : மரண துயர்; மரண வேதனை : சாத்துயர்.

death-bed : மரண படுக்கை; இறுதிப் படுக்கை.

death damp : மரண வியர்வை.

death - wound : மரணப் புண் : சாவுக் காயம்.

Debendox : டேபின்டோக்ஸ் : டாக்சிலாமின், பைரோடாக்சின், ஹைடிரோ குளோரைடு கலந்த டைசைக்ளோமின் தயாரிப்பின் வணிகப்பெயர். கரு