பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

debilitated

364

decapitation


வுற்ற தாய்மார்களின் மசக்கையின் போது வாந்தியையும் குமட்டலையும் நிறுத்தக் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது இதனால் குழந்தைகள் கோர உருவுடன் பிறக்கலாம் என்று ஐயுறப்படுவதால், இதைப் பயன் படுத்துவது நிறுத்தப்பட்டு விட்டது.

debilitated : வலுக்குறைந்த; நலிவான.

debility : நரம்புத் தளர்ச்சி; வலு விழப்பு நோய் : நரம்புத்தளர்ச்சி காரணமாக உடல்சோர்வும் தசைத்தளர்ச்சியும், ஊக்கக் கேடும் உண்டாகும் நிலை.

debridement : அயற் பொருள் நீக்கம்; கசடு எடுத்தல் : ஒரு காயத்தின் சேதமடைந்த திசுவிலிருந்து அயல் பொருளை அப்புறப்படுத்துதல்.

debris : மடிவுச் சிதறல்; உண்வுத்துகள்; குப்பைக்கூளம் : உயி ரூட்டம் பெறாத திசுக்கள் அல்லது அயல் பொருள்கள் சிதைவுறுதல்.

debrisoquine : டெப்ரிசோக்குவின் : தாழ்ந்த இரத்த அழுத்தத்தைக் குணப்படத்துவதற்கான மருந்து.

debulking operation : கட்டி அறுவைச் சிகிச்சை : பெரிய உக்கிரமான கட்டித் திரட்சிகளை வெட்டி எடுத்துக் குறைத்தல்.

Decadron : டெக்காட்ரோன் : டெக்சாமெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Deca Durabolin : டெக்கா டுராபோலின் : ஆண்பால் செயற்கை இயக்குநீர் உயிர்ப்பொருளின் வணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. புற்றுநோய் உயிரணுக்கள், 'ஊஸ்டிரோஜன்' என்ற பொருளை எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறது.

decalcification : சுண்ணகமகற்றுதல்; பற்சுண்ணம் நீக்கம்; சுண்ணம் எடுத்தல் : பல் சொத்தையை அகற்றுதல், கால்சியம் வளர்சிதை மாற்றுக் கோளாறுகளில் எலும்பை அகற்றுதல் போன்று, கனிம உப்புகளை நீக்குதல்.

decannulation : உயிர்ப்பு உதவும் குழாய் நீக்கம் : அறுவை உயிர்ப்புக் குழாயை அகற்றுதல்.

decant : வடித்திறுத்தல்; இறுத்தல் : வண்டலை அடியில் படிய விட்டு, திரவத்தை மட்டும் வடித்து இறுத்தல்.

decantation : வடித்து வடிகட்டல்; வடித்து இறுத்தல்.

decapitate :தலைநீக்கல்; தலைகொய்தல்.

decapitation : தலை வெட்டல்; தலைவெட்டு; தலை கொய்வு; தலை அகற்றல்; தலை சீவல் :