பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decussation

367

degradation


decussation : நரம்பிழைக் குறுக்கு வெட்டு; குறுக்குப்பின்னல் : நரம்பிழைகள் ஒரு புள்ளியில் குறுக்காக வெட்டுதல். கண் நரம்பிழைகள் இவ்வாறு அமைந்திருக்கும்.

dedifferentiation : தனிப்பண்பு நீக்கம் : தனிச் சிறப்பான அம் சங்களை நீக்கி மீண்டும் மூல வடிவத்துக்குக் கொண்டுவருதல்.

deep : ஆழ்; ஆழ்ந்த.

defaecation : மலநீக்கம்; மலக்கழிப்பு; மலப்போக்கு : மலத்தை நீக்குதல்.

defect : குறை.

defence : நோய் எதிர்ப்பு; அரண்; காப்பு : 1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை.

defervescence : வெப்பத் தணிவு; இறக்கம்; காய்ச்சல் தணிப்பு : காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல்.

defibrillation : நுண்ணிழைப் பிரிவுத் தடுப்பு; உதறல் நீக்கல்; குறுநடுக்கமெடுப்பு : இதயத் தசை நார் நுண்ணிழைகளாகப் பிரிவதைத் தடுத்தல்.

defibrillator : நுண்ணிழைப்புப் பிரிவுத் தடுப்பி; உதறல் நீக்கி; குறுநடுக்கமெடுப்பு : தசைநார் நுண்ணிழைகளாகப் பிரிவதைத் தடுக்கும் மருந்து.

deficiency : குறைவு.

deficient : குறைபாடுடைய.

deficiency disease : குறைபாட்டு நோய்; பற்றாக்குறை நோய் : நல்ல உடல்நலத்துக்கு இன்றியமையாத பொருள் உணவில் குறைவாக இருப்பதால் உண்டாகும். குறிப்பாக, வைட்டமின்கள் குறைபாட்டினால் ஏற்படும் நோய்.

deficient : குறை.

definition : வரையறை : 1. ஒரு நோயின் செயல் முறையின் வரையறைகளைத் துல்லியமாக அறுதியிடுதல். 2. ஊடுகதிர் ஒளிப் படச்சுருளில் உருக்காட்சிகளைப் பதிவு செய்தல்.

deformity : ஊனம்.

degeneration : இனச்சிதைவு; திசு அழிவு; திசு செயலிழப்பு; நலிவு; அழிவு : திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது.

degloving : தோலுரிப்பு : அடிநிலைத் திசுவிலிருந்து தோலைத் தனியாகப் பிரித்தெடுத்தல்.

degradation : தரக்குறைவு; நிலை இறக்கம்; நிலையழிவு; இயற்குறைவு : இயற்பியல், வளர்