பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

denitrogenation

371

dental plaque


உண்டு பண்ணக்கூடிய கொள்ளை காய்ச்சல். தலைவலியும் கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியையும் உண்டாக்கும். இந்நோய் ஒவ்வொரு முறை தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. இது வெப்ப மண்டலங்களில் ஒரு வகை கொசுவினால் உண்டாகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச் சலையும் உண்டாக்குகிறது.

denitrogenation : நைட்ரஜன் நீக்கம் : ஒருவரின் உடம்பிலிருந்து நைட்ரஜனை நீக்குதல். இதன் மூலம் 100% ஆக்சிஜன் சுவாசிப்பதற்கு வழிவகுக்கப் படுகிறது.

Dennis Browne splints : எலும்பு வரிச்சல் : பிறவியில் ஏற்படும் கோணக்காலைச் சரிப்படுத்துவதற்கு எலும்பைக் கட்டப் பயன்படும் வரிச்சல். இது உலோகத்தினால் செய்யப்பட்ட பாதத்தைக் கொண்டிருக்கும். இதனுடன் குழந்தையின் பாதம் இணைக்கப்பட்டிருக்கும்.

Denny-Brown neuropathy : டென்னி-பிரவுன் நரம்புக் கோளாறு : நரம்பு மண்டலம் நேரடியாகத் தொடர்பு கொள்ளாதிருக்கிற உக்கிர வேகம் தொடர்பான நரம்புக் கோளாறுகள் மற்றும் தசை நலிவுகள்.

dense granule : அடர் துகள் : ADP, ATP, கால்சியம், பைரோ பாஸ்பேட், செரோட்டோனின் ஆகியவை அடங்கியுள்ள தகட்டணுக்களிலுள்ள ஒரு வட்டவடிவச் சேமிப்பிடம்.

densitometer : செறிவு மானி : 1. பாக்டீரியா வளர்ச்சியை அள விடுவதற்கான ஒரு கருவி. 2. ஊடுகதிர் ஒளிப்படத்தின் ஒளியியல், செறிவினை அளவினை அளவிடுவதற்கான ஒரு கருவி.

density : அடர்த்தி; அடர்வு.

dental : பல்.

dental plaque : பல் கரை : பற்களைச் சுகாதார முறையில் துப்புரவாக வைத்துக் கொள்ளாத தன் காரணமாகப் பற்களில்