பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deoxycortone acetate

373

depllatories


deoxycortone acetate : டியாக்சிக் கோர்ட்டோன் அசிட்டேட் : குண்டிக்காய்ச் சுரப்பியின் மேலுறையில் சுரக்கும் முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்). இது, சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. முன்னர், அடிசன் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப் பட்டது.

deoxygenation : ஆக்சிஜன் நீக்கம் : ஆக்சிஜனை நீக்கி விடுதல்.

deoxyribonucleic acid : டிஆக்சி ரிபோநீயூக்ளிக் அமிலம்(டி.என்.ஏ) : உயிரணுக் கரு மையத்திலும் நோய்க் கிருமிகளிலும் காணப்படும் இனக்கீற்றுகள் 'குரோமோசோம்' எனப்படும் சிக்கலான மூலக்கூறுகள். இவை மரபுப் பண்புகளை வழிவழியாகக் கொண்டு செல்கின்றன.

deoxyribose : டி ஆக்சிரிபொஅஸ் : டி.என்.ஏ-இன் பகுதியாக இருக்கும் ஒரு பென்டோஸ் சர்க்கரை.

department: துறை;புலம்.

department, casuality : அவசர நோயகம்; விரைவு மருத்துவத் துறை; அவசர மருத்துவப் பிரிவு.

department, orthopaedic : முட நீக்கியல் துறை.

dependence : பழக்க அடிமை : தவறான பொருள்களைப் பயன் படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலை. போதை மருந்து போன்ற பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருத்தல்.

depersonalization : ஆளுமை இழப்பு உணர்வு : ஒருவருக்குத் தன்னுடைய ஆளுமையை இழந்து விட்டதாகத் தோன்றும் அடிமை மனப்பான்மை. முரண் மூளை நோய், மனச் சோர்வு போன்ற நிலைகளில் இந்த உணர்வு ஏற்படும்.

depigmentation : நிறமி நீக்கம் : வெண்குட்டநோயில் போன்று இயல்பான நிறமி இழக்கப்படுதல் அல்லது நிறமி நீக்கப் படுதல்.

depilation : முடி அகற்றல்; முடி நீக்கம்.

depilatories : மயிர் நீக்கம்; மயிர் பிடுங்கல்; முடியகற்றல் : முடி களைதல்.

depiletion : செறிவுக்குறைப்பு; வெறுமையாக்கல் : உடலிலிருந்து இரத்தம், நீர்மங்கள், அயம், கொழுப்பு, புரதம் போன்ற பொருள்களை நீக்குதல்.

depllatories : மயிர் நீக்கும் மருந்துகள்; மயிரழிப்பி : உடலில் அளவுக்கு அதிகமாகவுள்ள மயிரினைத் தற்காலிகமாக