பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Depixol

374

Dercum's disease


நீக்கும் மருந்துகள். பேரியம் சல்ஃபைடு இந்த வகையைச் சேர்ந்தது.

Depixol : டெப்பிக்சால் : ஃபுளுப் பெந்திக்சால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

depolarisation : முனைப்பு நீக்கம் : உயிரணுச் சவ்வினூடே இயல்பான ஆற்றலை எதிமாறாக்குதல். இதனால் சோடியம் உட்செல்ல வழி ஏற்படும்.

deposit : படிவு : 1. ஒரு படிவுப் பொருள் அல்லது வீழ்படிவு. 2. உடலின் ஏதேனும் பகுதியில் திரளும் பொருள்.

depot : சேமிப்பிடம்; சேமமனை.

depot preparation : கசிவு மருந்து : ஊசிக் கருவியிலிருந்து மெல்ல மெல்லக் கசிந்து வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மருந்து மெத்தில் பிரட்னி சோலோன், மேட்ரோக் சிபிரோ ஜெஸ்டிரோன் என்ற இந்தவகை மருந்துகள்.

depression : மனச்சோர்வு; மீக்கவலை : அளவுக்கு மீறிய மனக் கவலை காரணமாக உண்டாகும் மனக்கோளாறு. இது இரு வகைப்படும்: 1. நரம்பியல் வகை, இது எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியது. 2. உளவியல் வகை இது உள்ளத்தில் உடனடியாக உண்டாகக் கூடியது. இந்த உணர்வுடையவர்கள், உயிர் வாழ்வது வீண் என்று கருதித் தற்கொலைக்கு முயலக் கூடும்.

deprivation : செயலிழப்பு : தேவை பகுதி அல்லது செயற்பாடு இழக்கப்படுதல் அல்லது இல்லாதிருத்தல்.

DepProvera : டெப்போப்ரோவெரா : மெட்ராக்சிப்ரோ ஜெஸ்டிரோன் அசிட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

deprivation syndrome : கையறு நிலை : பெற்றோர்களால் கை விடப்படும் குழந்தைகளுக்கு இது முக்கியமாக உண்டாகிறது. இதனால், வளர்ச்சிக்குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பானை வயிறு, பெரும் பசி, மயிர் கொட்டுதல், எடை ஏறுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

deptropin citrate : டெப்டிரோப்பின் சைட்ரேட் : மூச்சுக் குழல் அடைப்பு, மூச்சுக்குழல் ஈளை நோய் (ஆஸ்துமா), மார்புச் சளி நோய் ஆகியவற்றுக்கு மாத்திரையாகவும், ஊசி மருந்தாகவும் கொடுக்கப்படும் மருந்து.

derangement : சீர்குலைவு.

Dercum's disease : டெர்க்கம் நோய் : தோலுக்கடியில் உண்டாகும் கொழுப்புக் கட்டி. இதனால் பலவிதமான வலி உண்டாகும். அமெரிக்க நரம்பியல் ஃபிரான்சிஸ்டெர்க்கம் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.