பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diapedesis

383

diathermy


diapedesis : நாளவழி குருதிப் போக்கு : இரத்த நாளங்கள் வழியாக இரத்தம் அல்லது அதன் பொருள்கள் வெளியேறுதல்.

diaphoresis : செயற்கை வியர்வை : செயற்கையாகத் தூண்டப்படும் வியர்வை.

diaphoretic : வியர்வை மருந்து : செயற்கையாக வியர்க்கச் செய்கிற மருந்து.

diaphragm : இடைத்திரை; உதர விதானம் (உந்து சவ்வு) பிரிப்புத் தசை கருத்திரை இடைத்திரை : ஈரலுக்கும் குடலுக்கும் நடுவே உள்ள சவ்வு.

diaphragmatitis : ஈரல் தாங்கி அழற்சி.

diaphysis : நடுவெலும்பு.

diarrhoea : பேதி; கழிச்சல் : வயிற்றுப்போக்கு மகப்பேற்று மருத்துவ மனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி கடுமையாகத் தொற்றக்கூடியது இதனால், இரைப்பை-குடல் நோய் உண்டாகக்கூடும்.

diascopy : தோல் கண்ணாடிப் பரிசோதனை : நீரில் காணப்படும் சிதைவுகளைப் பரிசோதிக்கும் முறை. ஒரு கண்ணாடி பட்டைத் தோல் சிதைவின் மீது வைத்து அழுத்தும் போது அந்த இடம் வெண்மையாகும். அப்போது அச்சிதைவுகளைப் பரிசோதிப்பது.

diasone : தொழு நோய் மருந்து : தொழுநோய் தடுக்கப் பயன் படுத்தப்படும் மருந்து.

diastase : செரிமானப் பொருள் : செரிமானத்திற்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் அமிலப் பொருள்.

diastasis : எலும்புப் பிரிவு; எலும்புப் பிரிப்பு; மூட்டு நழுவல் : எலும்புகளை முறிவின்றிப் பிரித்தல்.

diastole : நெஞ்சுப்பை விரிவியக்கம்; இதய விரிநிலை; இதய விரிவு : இரத்த நாளத்தின் விரிவியக்கம்.

diathermy : அகமின் வெப்ப மூட்டுதல்; மின் தீய்ப்பு மருத்துவம்; சுட்டெரித்தல்; ஊடு தீய்ப்பு :