பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digastric

386

digital sub...


digastric : கீழ்த்தாடைத் தசைப் பற்று.

digest : செரிமானம்; செரிப்பித்தல் : உணவின் காரத்தை வயிற்றினுள் ஈர வெப்ப நிலைகளில், தக்கவாறு பக்குவம் செய்து செரி மானம் செய்தல்.

digester : செரிமானிப்பவர்.

digestible : செரிக்கக்கூடிய.

digestion : செரிமானம்; செரித்தல் : சத்துப்பொருள்களை உடல் ஈர்த்துக்கொள்ளும் வகையில் உணவு செரிமானம் ஏற்படும் உடலின் இயக்கமுறை.

digestive : செரிமானம் தரும் பொருள் : சத்துப் பொருட்களை உடல் ஈர்த்துக் கொள்ளும் வகையில் உணவு செரிமானம் ஏற்படும் உடலின் இயக்கமுறை.

digit : இலக்கம்; எண்; விரல்.

digital compression : விரல் அழுத்தம் : இரத்தம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகத் தமனியில் விரல்களால் கொடுக்கப்படும் அழுத்தம்.

Digitaline : டிஜிட்டாலின் : டிஜிட்டாக்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

digitalis : செடி மருந்து : டிஜிட்டாலிஸ் செடி வகைகளிலிருந்து எடுக்கப்படும் மருந்து. நெஞ்சுப்பையைப் பலப்படத்துவதற்குச் சிறந்தது.

digitalisation : டிஜிட்டாலின் மருத்துவச் சிகிச்சை : நெஞ்சுப் பையைப் பலப்படுத்துவதற்காக, டிஜிட்டாலிஸ் என்ற செடி வகைகளிலிருந்து எடுக்கப்படும் டி.ஜோக்சின் என்ற கிளைக்கோசைட் மருந்தினைப் போதிய அளவில் கொடுத்தல். இதனை சிரைவழியாகவும் செலுத்தலாம்.

digital radiography : இலக்க முறை ஊடுகதிர் படம் : கணினி மயமாக்கிய உருக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர்ப்பட மெடுத்தல். -

digital subtraction angiography : இலக்கமுறைக் குறைப்பு : இதய