பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dilatation

388

dioctylsodium sulpho...


dilatation : விரிவடையச் செய்தல்; விரித்தல்; அகவிப்பு : கழுத்துத் தசையினையும், கருப்பைச் சவ்வினையும் விரிவடையச் செய்தல்.

dilator : விரிவாக்கி : தசைகளை விரிவாக்குவதற்கு, அல்லத உட்குழிவுகளை அல்லது புண் வாய்களை அகலப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Dilaudid : டிலாடிட் : டைஹைட் ரோமார்ஃபினான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

diloxanide furoate : டைலோக்சானைட் ஃபூரோயேட் : வயிற்றுப் போக்கை நிறுத்தக் கொடுக்கப்படும் மருந்து.

diluent : நீர்ப்புப் பொருள் : கலவையின் செறிவினைத் தளர்த்துவதற்கான ஒரு நீர்ப்புப் பொருள்.

dilution : நீராளம்.

Dimelor : டைம்லோர் : அசிட்டேஹெக்சாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dimenhydrinate : டைமென்ஹெடிரினேட் : பயணநோய், மசக்கை வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றைத் தடுக்கப் பயன்படும் சக்கி வாய்ந்த மருந்து.

dimercaprol (BAL) : டைமர்காப்ரால் : ஆர்செனிக், தங்கம் ஆகியவற்றினால் ஏற்படும் நச்சுத் தன்மையைப் போக்குவதற்குப் பயன்படும் ஒரு கரிமக் கூட்டுப்பொருள். இதனை பாதரச நச்சுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஈய நச்சுக்கு இதனைப் பயன்படுத்தலாகாது.

dimethicone : டைமெத்திக் கோன் : ஒரு சிலிக்கோன் எண்ணெய். நீரில் கரையும் எரிச்சலூட்டும் பொருள்களுக்கு எதிரான தோல்காப்பு மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

dimorphic anaemia : திரிபுக் குருதிச் சேர்க்கை : புறக்குருதிப் பிசுக்களில் நுண்நிறமி மற்றும் இயல்புப் பெருஞ்சிவப்பு உயிரணுக்கள் இரண்டும் இருத்தல்.

dimorphous : இருதிரிபுப் படிவமைப்பு : நொதி, பூஞ்சண வலை போன்ற இருவேறுபட்ட படிவங்ளை உண்டாக்கும் பூஞ்சணத்தின் ஒரு குண இயல்பு.

dimple : கன்னக்குழி : கன்னத்தில் விழும் சிறுகுழி.

Dindevan : டிண்டிவான் : ஃபெனின்டியோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Dint : தழும்பு; வடு.

Dioctyl : டையாக்டில் : டையாக்டில் சோடியம் சல்ஃபோசக் கினேட்.

dioctylsodium sulphosuccinate : டையாக்டில்சோடியம் சல்ஃபோ