பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disassimilation

392

diseas-filarial


ஒரிரு உறுப்பினை அறுத்து எடுத்தல் முட்டில் அழுகிய எலும்பைப் பிரித்தல்.

disassimilation : செரியுணவு மாற்றம் : செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறுகூறுகளாகப் பிரிதல்.

disaster : பேரிடர்/உற்பாதம் : நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, தீவிபத்து, வெடிவிபத்து, குண்டு வீச்சு, நச்சுவாயுக் கசிவு, நச்சுப் பொருள் கசிவு போன்ற அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் எதிர்பாராத, வழக்கத்துக்கு மாறான திடீர் பேரிடர்கள்.

disc : வட்டம்; வட்டத்தகடு.

disc,optic : கண் நரம்பு வட்டம்.

discectomy : எலும்புத் தகடு அறுவைச் சிகிச்சை : தண்டெலும்புத் தகடு ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

disharge : வெளிப்போக்கு; வெளியனுப்பு.

discharge, menstrual : மாத விடாய்ப் போக்கு.

discography : முள்ளெலும்புத் தகட்டு ஊடுகதிர்ப் படம் : மிக நுண்ணிய ஊசி மூலமாகக் கீழ் முதுகுப்பகுதித் தகட்டில் நீரில் கரையும் சாயப்பொருளைச் செலுத்திய பிறகு எடுக்கப்படும் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படம். இது வெளித்தள்ளிய முள்ளெலும்புத் தகட்டில் இயல்பான மைலோ கிராமுடன் எடுக்கப்படுகிறது.

discolouration : நிறம் பிரிதல்.

discomfort : நலக்குறைவு : மன உலைவு.

discompose : சீர்குலைவு; குழப்பு; மன அமைதி குலை.

discomposure : மன அமைதிக் கேடு.

discrimation : வேறுபாடு உணர்தல் : வேறுபடுத்தி அல்லது மாறு பாடு உணர்த்திக் காட்டும் செய்முறை.

discussion : உறையாடல்; விவாதம்; கலந்துரையாடல்.

disease : நோய்; பிணி; நலக்கேடு : உடலின் எந்தப்பகுதியின் கட்டமைப்பும், செயற்பணியும் இயல்பான நிலையிலிருந்து பிறழ்வதால் ஏற்படும் கோளாறு. இது சில நோய்க் குறிகள் மூலம் புலப்படும்.

diseas, bono : எலும்பு நோய்.

diseas, coeliac : வயிற்று நோய்.

diseas, deficiency : குறைபாட்டு நோய்.

diseased : நோய்ப்பட்ட.

diseas, endemic : நிலைத்த; நோய்.

diseas, epidemic : மிகைத்த நோய்; கொள்ளை நோய்.

diseas-filarial : யானைக்கால் நோய்.