பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diseas-heart

393

dislocation


diseas-heart : இதய நோய்.

diseas, ischoemic heart : இதயக் குருதித் தடை நோய்; இதயக் குருதியிலா நோய்.

diseas, mental : மன நோய்.

diseas, skin : தோல் நோய்.

diseas, specific : தனி நோய்; குறித்த நோய்.

disengagement : விடுவிப்பு : தாயின் இடுப்பு வளையத்தினுள்ளிருந்து கருவுயிரியின் தலை விடுபட்டு வெளிப்படுதல். 2. உணர்ச்சித் தொடர்பு எதுவுமின்றி உளவியல் தானியக்கத்துடன் செயற்படுதல்.

disentaglement : மீட்பு உத்தி : இடிபாட்டில் சிக்கிய ஒருவரை அதிலிருந்து மீட்பதற்கான ஒர் உத்தி.

disequilibrium : நிலையிலாச் சமநிலை : சமமற்ற மற்றும் உறுதி யற்ற சமநிலை.

disgorge : கக்கு : வாந்தியெடு.

disimpaction : எலும்பு பிரிப்பு : மோதல் காரணமாக எலும்புகள் முறிந்து ஒன்றினுள் ஒன்று நுழைந்திருக்குமானால், அந்த எலும்புகளின் முறிந்த முனைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தல். பிறகு, எலும்புகளை சீரான நிலையில் பொருத்துவதற்குக் கட்டுப் போடப்படுகிறது.

disinfect : தொற்றுத் தடை காப்பு செய்.

disinfectant : தொற்றுத் தடை மருந்து; நுண்ணுயிர் எதிர்ப்பி; தொற்றுநீக்கி ; கிருமி நீக்கி : நச்சுத் தடைக்காப்புப் பொருள்.

disinfection : தொற்றுத்தடைக் காப்புச்செய்தல் ; நுண்ணுயிர் நீக்கம்; தொற்று நீக்கல்; கிருமி நீக்கம் : நச்சுத்தடைக் காப்புப் பொருள்களைப் பயன்படுத்தி ஆடை இடங்கள் முதலியவற்றிலிருந்து தொற்றுக் கிருமிகளை நீக்கித் துப்பரவு செய்தல்.

disinfestation : புழு நீக்கம்.

disinhibition : தடையுணர்வு நீக்கம் : 1. தடையுணர்வை ஒழித்தல். 2. சமூக அல்லது பண்பாட்டுத் தடைக்கட்டுகள் எதுவுமில்லாமல் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உளவியல் சுதந்திர உணர்வு.

disintegration : நிலை குலைதல்.

Disipal : டிசிப்பால் : ஆர்ஃபினாப்ரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

disipidin : டிசிப்பிடின் : பின்புற மூளையடிச் சுரப்பித் தூள் சிறுநீர்க்கழிவு, சர்க்கரையின்மை நீரிழிவு, இரவில் சிறுநீர்க்கழிவு போன்ற கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

dislocation : நழுவிய மூட்டு; இடப்பிறழ்வு; நிலைமாறுதல்; பிசகுதல் : உறுப்புகள் இடம் பெயர்ந்திருத்தல்.இதுபிறவியிலேயே