பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Donovan body

398

doubling time


Donovan body : டோனோவன் திரட்சி : திசுக்கட்டியை உண்டாக்கும் பொருள். இந்தியாவில் பணிபுரிந்த அயர்லாந்து மருத்துவர் சார்லஸ் டோனோவான் பெயரால் அழைக்கப்படுகிறது.

Doppler ultrasound technique : டோப்லர் கடுமுனைப்பு ஒலி நுட்பம் : நெஞ்சுப்பைக்குள் இரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதி நாளமாகிய சிரையின் வழியாகப் பாயும் இரத்தத்தின் வேக வீதத்தை அளவிடுவதற்கு கடுமுனைப்பு ஒலியை அனுப்பும் ஒர் எந்திரம். சிரை முழுவதுமாகத் தடைப்பட்டிருக்குமானால், இரத்தம் பாய்தல் இராது; எனவே ஒலி வராது.

Dopram : டோப்ராம் : டோகாப்ராம் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

Doptone : டோப்டோன் : கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பினை எதிரொலித் தத்துவத்தின் மூலம் கண்டறிய உதவும் ஒரு கருவியின் வணிகப்பெயர்.

Dorbanex : டோர்பானெக்ஸ் : டாந்திரோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dormant : ஒடுக்க நிலை.

Dornier litho tryptor : டோர்னியர் லித்தோ கருவி : சிறுநீரகத் திலுள்ள சிலவகைக் கற்களை அதிர்ச்சியலைகள் மூலம் அழிக்கக் கூடிய ஒரு கருவி.

dorsal : முதுகுப்புறம்; பின்புறம்; முதுகிய; புற; முதுகு : முதுகுப் பகுதி சார்ந்த அல்லது ஒர் உறுப்பின் முதுகுப்புறம். தலையணையை ஆதாரமாக வைத்து மல்லாந்து படுப்பது முதுகுப்புற நிலையாகும்.

dorsiflexion : முதுகுப்புற வளைவு : ஒரு மூட்டுப்பகுதியில் ஒர் உறுப்பு முதுகுப்புறமாக வளைந்திருத்தல்.

dorsocentral : முதுகு மையம் : முதுகின் மையப் பகுதியை அடுத்துள்ள பகுதி.

dorsolumbar : பின்புற இடிப்புப் பகுதி; பின் இடை : முதுகுப்புறமுள்ள இடுப்புப்பகுதி சார்ந்த.

dosage : மருந்தளவு : ஒரு மருந்தினை எந்தெந்த வேளைகளில் எந்தெந்த அளவுகளில் நோயாளிக்குக் கொடுக்க வேண்டும் என்ற அளவு.

dose : வேளை மருந்து.

dorsum : புறம்; முதுகு.

dosimeter,dose meter : ஊடு கதிர்மானி : ஊடுகதிர்களை (எக்ஸ்ரே) அல்லது காமாக் கதிர்களை அளவிடக்கூடிய ஒரு கருவி.

doubling time : இரட்டிப்பாக்கும் நேரம் : 1. ஒரு நைவுப்புண் விட்டத்தில் 1.25 மடங்கு அதிகரிப்பதற்கான கால அளவு. அதாவது, 2 செ.மீ விட்ட முள்ள புண் 2.5 செ.மீ யாக அதிகரிப்பதற்கான கால அளவு.