பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

abdominal dehiscence

39

abducent nerve


அல்லது அதிகத் தளர்ச்சியினாலோ ஏற்படும் வயிற்றுத் தசைநார்ச் சுரிப்பு.

abdominal dehiscence : வயிற்றுக் காயப் பிளப்பு: வயிற்றுத் தையல் வெடிப்பு.

abdominal pain : அடிவயிற்று வலி; வயிற்றுவலி.

abdominal respiration : வயிற்று மூச்சு.

abdominocentesis : வபை வலி; அடிவயிற்றுத் துளை: இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) உட்குழியின் பக்க வலியாகும்.

abdominocyesis : வயிற்றுப் பிரசவம்: வயிற்றைப் பிளந்து குழந்தையைப் பிறக்கச் செய்தல்.

abdominal segment : வயிற்று வளையம்.

abdominal wall : வயிற்றுச் சுவர்.

abdominohysterectomy : வயிற்று வழிக்கருப்பை நீக்கம்; வயிற்று வழிக் கருப்பை அகற்றுதல்: வயிற்றைக்கீறி கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம்.

abdomino-pelvis : வயிற்றை ஒட்டிய இடுப்பு.

abdominoperineai : கீழ் வயிற்று மூல உறுப்புப் பகுதி; அடிவயிற்று விதை-கருவாய் இடைப்பகுதி: அடிவயிற்றுக்கும் உடலில் விதைப் பைக்கும் கருவாய்க்கும் இடைப்பட்ட பகுதிக்கும் தொடர்புடைய நோய்.

abdominoscopy : வயிற்றுள் நோக்கி; வயிற்றறை உள்நோக்கி: வயிற்றறையையும் அதனைச் சார்ந்த உள்ளுறுப்புகளையும் உள்நோக்கிக் கருவி மூலம் பரிசோதிப்பது.

abdominothoracic : மார்பு வயிறு: வயிறும் நெஞ்சும் சார்ந்த பகுதி.

abdominous : தொந்தி வயிருடைய: தொந்தியுள்ள.

abducens : வெளிவாங்கி; வெளி உருட்டு: உடலின் மையப்பகுதி யிலிருந்து வெளிப்பக்கமாக விலகுதல் அல்லது வெளிநோக்கித் தள்ளுதல்.

வெளி உருட்டுத் தசை: விழிவெளி உருட்டுத் தசை விழிக் கோளத்தை வெளிப்பக்கமாக அசைய வைக்கும்.

வெளி உருட்டு நரம்பு: ஆறாவது தலை நரம்பு. இது விழிவெளி உருட்டுத்தசைக்குச் செல்கிறது.

abducent; வெளித் தள்ளல்; சுற்று வழி: வெளிப்பக்கமாக இழுத்தல், வெளிநோக்கித் தள்ளுதல்.

abducent nerve : சுர்றுவழி நரம்பு.