பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

douche

399

Dramamine


கட்டிகளின் உக்கிர வேகத்தை அளவிடுவதற்கு முக்கியமான வழி.

douche : பீற்றுக்குழல் தாரை; உடற்குழி கழுவல்; தாரை; உட்கழுவு : உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுக் குழலின் தாரை.

Douglas bag : டக்ளஸ் பை : வெளியேற்றப்பட்ட காற்றைச் சேகரிப்பதற்கான, இடம்விட்டு இடம் கொண்டு செல்லக்கூடிய ஒரு பெரிய பை. இது உள்ளிழுக்கப்பட்ட கார்பன்டையாக்சைடு அளவை அளவிடுவதற்குப் பயன்படுகிறது. பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் கிளாட்டக்ளஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Douglas pouch : டக்ளஸ் பொதியுறை : மலக்குடல்-சிறுநீர்ப்பை சார்ந்த பொதியுறை. ஸ்காட்லாந்து மருத்துவர் ஜேம்ஸ் டக்ளஸ் பெயரால் அழைக்கப் படுகிறது.

down syndrome : மனநலிவு நோய் : பிறவியிலேயே உண்டாகும் கடுமையான மனநோய் வகை. இந்த நோய் கண்டவர்களுக்கு மங்கோலிய இனத்தவரைப் போன்ற முகபாவங்கள் உண்டாகும். மட்டைபோல் திருகிய கண்கள், மாறுகண், தட்டையான பின்தலை ஆகிய கோளாறுகள் ஏற்படும். டெளனால் விளக்கியது.

doxapram : டோக்சாப்ராம் : இன்றியமையாத பின்மூளை மையங்களைத் துண்டிவிடும் ஒரு மருந்து. இது பார்பிட்டு ரேட்டினால் ஏற்படும் நச்சுத் தன்மையைப் போக்கப் பயன் படுத்தப்படுகிறது.

doxepin : டோக்செப்பின் : மனச் சோர்வகற்றும் மருந்துகளில் ஒன்று. 3-15 நாட்கள் உட்கொண்டபின் செயற்படத் தொடங்கும்.

doxorubicin : டோக்சோரூபிசின் : உயிர்ம நச்சு நீக்கும் மருந்து. குழந்தைகளுக்கு ஏற்படும் வெறுப்பு நோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.

doxycycline : டோக்சிசைக்ளின் : இது ஒரு டெட்ராசைக்ளின். இது விரைவாக ஈர்த்துக் கொள்ளப்பட்டு, மெதுவாக வெளியேற்றப்படுகிறது நுண்ணுயிரெதிர் மருந்து.

DPT vaccine : முத்தடுப்பு ஊசி : தொண்டை அழற்சி, கக்குவான், நசிப்பிசிவு ஆகிய மூன்று நோய்களுக்கும் எதிரான தடுப்பு ஊசி மருந்து.

drain : வடிகுழல்; வடிகால்; வடிப்பு : அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ், அழுக்கு நீர் வடிப்பதற்கான குழல்.

drainage : வடிமானம்.

drainage-tube : சீழ் குழல்.

Dramamine : டிராமமின் : டை மென்ஹைட்ரினேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.