பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

duodenectomy

403

Dupuytren's con...


duodenectomy : முன்சிறுகுடல் அறுவைச் சிகிச்சை : முன்சிறு குடலின் பகுதியை அல்லது அதனை முழுவதும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

duodenitis : முன்சிறுகுடல் அழற்சி; சிறுகுடல் : முன்சிறு குடலில் ஏற்படும் வீக்கம்.

duodenoenterostomy : முன்சிறுகுடல் இடைவழி : முன்சிறுகுட லுக்கும் குடலுக்குமிடையில் அறுவைச்சிகிச்சை மூலம் ஒர் இடைவழி உண்டாக்குதல்.

duodenography : முன்சிறுகுடல் ஊடுகதிர் ஆய்வு : முன் சிறு குடலை ஊடுகதிர் படம் எடுப்பதன் மூலம் ஆய்வு செய்தல்.

duodenopancreatectomy : முன் சிறுகுடல் அறுவை மருத்துவம் : கணையத்தின் தலைப்பகுதியில் புற்று நோய் ஏற்படும்போது முன் சிறுகுடலிலும், கணையத்தின் பகுதியிலும் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை.

duodenoscopy : முன்சிறுகுடல் உள் முக ஆய்வு : முன்சிறு குடலை உள் நோக்குக் கருவி மூலம் ஆய்வு செய்தல்.

duodenostomy : முன்சிறுகுடல் திறப்பு : முன்சிறுகுடலினுள் அடிவயிற்றின் சுவர் வழியாக ஒரு நிரந்தரத் திறப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்குதல்.

duodenum : முன்சிறுகுடல்; முன் குடல் : மேலேயுள்ள இரைப்பையை கீழேயுள்ள மலக்குடலுடன் இணைக்கும் சிறுகுடலின் முற்பகுதி.

Duogastrone : டுவோகாஸ்டிரோன் : கார்பனாக்சோலோன் என்ற தயாரிப்பின் வணிகப் பெயர். இது பொதியுறை மாத்திரையாகக் கிடைக்கிறது. இது இரைப்பைக்குள் சென்றதும் இரு மடங்கு விரிவடைந்து இதனுள்ளிருக்கும் மருந்தினை வெளியேற்றுகிறது.

Duphalac : டுஃபாலாக் : லாக்டுலோஸ் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dupp : இரண்டாம் இதய ஒலி : இதயத்துடிப்புமானி மூலமாக கேட்கப்படும் இரண்டாவது இதய ஒலி. இது முதலாவது இதய ஒலியை விடக் குறுகிய தாகவும், அதிக ஒலியுடையதாகவும் இருக்கும்.

Dupuytren's contracture : விரல் குறுக்கம் : கையிலுள்ள விரல்கள்,