பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dysethesia

406

dyslipidaemia


சீழும் கலந்து வெளியேறுவதால் வயிற்றில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகைப் பாக்டீரியாவினால் உண்டாகிறது. துப்புரவின்மை, வீட்டு ஈக்கள் ஆகியவற்றினால் இது பரவுகிறது.

dysethesia : அதீத உணர்வு : தோலில் ஏற்படும் சிறு சிறு பொக்குளம், மரமரப்பு, காந்தல், வெட்டுணர்வு, குத்துணர்வு போன்ற இயல்கடந்த உணர்வுகள்.

dysfunction : இயல்பு கடந்த இயக்கம்; செயல் பிறழ்ச்சி; கெடு வினை; திரிபியக்கம்; செயற்கேடு : உடலில் உறப்பு அல்லது பகுதி எதுவும் இயல்புமீறி இயங்குதல்.

dysgenesis : உருவக்கேட்டு வளர்ச்சி; செனிப்புக்கேடு : கரு வளர்ச்சியின் போது ஏற்படும் பொருத்தமில்லா உருவக்கேடு.

dysgerminoma : கருப்பைக் கட்டி : கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை.

dysgonesis : பிறப்புறுப்பு நோய் : 1. ஒழுங்கற்ற பாக்டீரியா வளர்ச்சி. 2. பிறப்புறுப்புகளில் ஏற்படும் செயல்முறைக் கோளாறு.

dyshidrosis : கொப்புளம்; வியர்வைக் கட்டி : வியர்வை நாளங்கள் அடைபடுவதால் தோலில் உண்டாகும் கொப்புளம்.

dyskaryosis : மையக் கருவீக்கம் : ஒர் உயிரணுவின் மையக் கருவின் இயல்புகடந்த நிலை.

dyskeratosis : மேல்தோல் திசுக்கொம்புப் பொருள் மாற்றம் : மேல் தோலின் புறத்திக உயிரணுக்களின் கொம்புப் பொருள் மாற்றம் மாறுதலடைதல்.

dyskinesia : அசைவியக்க இழப்பு; அசைவிழப்பு: இயக்கக் கேடு : உளவியல் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவாக முகத்தையும், வாயையும் தானாக அசைக்க முடியாமல் போதல்.

dyskinesis : தன்னிச்சை அசைவு; முடக்கம் : தன்னிச்சையான அசைவுகளைச் செய்வதில் ஏற்படும் சிரமம்.

dyslalia : பேசும் திறனிழப்பு; சொற் கேடு : பேச்சு உறுப்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக பேசுவது கடினமாக இருத்தல்.

dyslexia : பேசும் ஆற்றலின்மை; சொல்யெழுத்துக்கேடு : எழுதவும் படிக்கவும், உச்சரிக்கவும் இயல்பாகத் திறனுடைய ஒருவர் அந்த ஆற்றல்களை இழந்து விடும் நிலை. இது மூளையில் காயம் அல்லது புலனுணர்வு நரம்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக ஏற்படும்.

dyslipidaemia : அதீத நிணநீர்க் கொழுப்பு நோய் : நிணநீர்க் கொழுப்புகளிலும் கொழுப்புப்