பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ear-trumpet

410

echocardiograph


ஒருங்கிணைந்த உடனேயே ஒர் ஊட்டுயிர் உயிரணு உற்பத்தி செய்யும் ஒரு மரபணு

ear-trumpet : ஒலியூட்டுப் பறை : காது மந்தமானவர் போதிய ஒலியுடன் தெளிவாகக் கேட்க உதவும் ஒருவகைப் பறைக் கருவி

ear wax : காது குரும்பி.

Eaton-Lambert syndrome : ஈட்டன்-லாம் பார்ட் நோய் : சுவாசத் தசை நலிவு எனப்படும் தசைநோய். இது நுரையீரல் சிறு உயிரணுப் புற்றுநோயுடன் சேர்ந்து ஏற்படுகிறது. இதனால், இடுப்புக்குழி, தோள் என்பு வளையத் தசைகள் நலிவடைதல், தசை நாண் இயக்கங்களை இழத்தல், உடற்பயிற்சிக்குப் பின் பலவீனம் அதிகமாதல் போன்றவை உண்டாகின்றன.

ebola : குருதிக் குழாய்க் காய்ச்சல் : உண்ணிகளினால் பரப்பப்படும் நச்சுக்கிருமிகளினால் உண்டாகும் குருதிக் குழாய் காய்ச்சல்.

ebonation : எலும்பு நீக்கம் : காயமடைந்தபின் முறிந்த எலும்புத் துண்டுகளை அகற்றுதல்.

ecbolic : கருப்பைச் சுருக்குப் பொருள்; கருப்பைச் சுருக்கி; கருத்தள்ளி : கருவுற்ற கருப்பையைச் சுருங்கச் செய்து, அதிலுள்ள கரு வெளிப்படுவதை விரைவுப் படுத்தும் ஒரு மருந்து.

ecchondroma : குருத்தெலும்புக் கட்டி; புறக்குருத்துக் கட்டி : குருத் தெலும்பில் உண்டாகும் கடுமையற்ற கட்டி இது எந்த எலும்பில் உண்டாகிறதோ அதன் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும்.

ecchymosis : தோலடிக் குருதிக் கசிவு; கீரல் குருதிக் கட்டு; கரும் குருதித் திட்டு; குருதிக்கட்டு : தோலடிக்கடியிலுள்ள இரத்தக் குழாய் கசிந்து இரத்தம் கட்டுதல்.

ECG : இ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராம்) : மின்னியல் முறையில் நெஞ்சுத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரைபடம்.

ecchymotic : தோல் நிறமாற்றம் : தோலில் அல்லது சளிச்சவ்வில் நிறம் நீங்கிய பகுதி. இது திசுவினுள்ளே இரத்தக் கழிவு உண்டாவதால் ஏற்படுகிறது.

ecerine : சுரப்பிய.

ecerine sweat gland : வியர்வை வெளியேற்றுச் சுரப்பி.

Echinococcus : நாடாப்புழு; ஒட்டுயிரான வயிற்றினுள் உள்ள புழு.

echocardiogram : இதய எதிரொலிப்பதிவு : மின்னியல் முறையில் நெஞ்சுத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரை படத்தில் பதிவான இதய அசைவுப் பதிவு.

echo cardiograph : இதய எதிரொலி வரைவி.