பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ecmnesia

412

ectopagia


பட்ட நேரத்துக்கும், உயிரணுக் களுக்கிடையிலான தொடர்வினை ஏற்படுவதற்கும் இடையிலான கால அளவு.

ecmnesia : பேறு காலச் சன்னி; பேறுகால வலிப்பு; கரு இசிவு; சூல் வலிப்பு; அண்மை மறதி : கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென நினைவிழத்தல்; அண்மை நிகழ்ச்சி மறத்தல்.

ecological : சூழல்சார்; சுற்றமைவுசார்.

ecology : சூழ்நிலையியல் : உலகில் வாழ்ந்து வரும் உயிரிகளுக்கும் சுற்றுப்புறச் சூழ் நிலைகளுக்கும் இடையில் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்த உயிர் அறிவியல் கல்வி.

econozole : எக்கனசோல் : ஒரு வகைக் காளான் கொல்லி மருந்து, இமிடசோல் பிரிவைச் சேர்ந்தது; மேல்தோல் காளான் நோய்களைக் குணப்படுத்த உதவும் மருந்து தோலின் மேல் இம் மருந்தைப் பூச வேண்டும்.

ecosphere : உயிர்மண்டலம் : வாழும் உயிரிகளும் தாவர உயிர்களும் உயிர் வாழும் அண்டத்தின் பகுதிகள்.

ecstosy : விம்மிதம்.

ectasia : வீக்கம்.

ecthyma : அண்மை நிகழ்ச்சி மறதி; அண்மை நிகழ்ச்சி நனவிழப்பு; அண்மை மறதி : அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போய் நெடுநாட்களுக்கு முந்திய நிகழ்ச்சிகள் நினைவிலிருக்கும் ஒரு வகை நோய். பொதுவாக முதுமைக் காலத்தில் இது தோன்றும்.

ectocardia : இதய இடமாற்றம் : பிறவிலேயே இதயம் இடம் மாறி இருத்தல், பிறவியில் இதயம் வெளிப்புறமாக அமைந்திருத்தல்.

ectoderm : புறமூலமுதல் தோற்றப் பொருள்; புறச்சருமியம்; புறத்தோல் :கருமுளையின் புற மூல முதல் தோற்றப் பொருள். இதிலிருந்து, தோல் அடுக்குகள், நரம்பு மண்டலம், சிறப்புப் புலனுணர்வு உறுப்புகள், கபச் சுரப்பி, குண்டிக்காய்ச் சுரப்பி ஆகியவற்றின் பகுதிகள் வளர்ந்தன என்பர்.

ectodermosis : புறமூலமுதல் தோற்றப் பொருள் நோய்; வெளிச் சருமிய நோய் : புறமூல முதல் தோற்றப் பொருளிலிருந்து எழும் உறுப்பு அல்லது திசுவில் உண்டாகும் நோய்.

ectogenesis : புறக்கரு வளர்ச்சி : கருப்பைக்கு வெளியே கரு வளர்தல்.

ectopagia : ஒட்டிய இரட்டையர் : உடலின் பக்கவாட்டுப் பகுதியில்