பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ehrlich's test

415

electrocautery


Ehrlich's test : எர்லிச் சோதனை : சிறுநீரில் யூரோபிலினோஜன் இருப்பத்தைக் காட்டும் சோதனை.

ejaculation : விந்துவெளிப்பாடு; விந்து திடீர் வெளியேற்றம்; பீச்சல்; விந்தேற்றம் : ஆணின் உறுப்பிலிருந்து விந்து திடீரென வெளிப்படுதல்.

ejaculatory duct : விந்துக்குழாய் : விந்துவை வெளியேற்றும் குழாய். விந்துக்குழாயின் நுனிப்பகுதி.

ejection fraction : குருதி வெளியேற்ற அளவு : இதயச் சுருக்கத்தின் போது இதயக் கீழறையிலிருந்து இரத்தம் வெளியேறும் அளவு.

ELAM : இலாம் : உள்வரித்தாள் ஊனிர் இணைப்பு மூலக்கூறு (Endothelial leucocyte adhesion molecula).

elastance : நெகிழ்திற எதிர்ப்பு : நுரையீரலின் நெகிழ்திற நோய் எதிர்ப்புத்திறன். ஒரு லிட்டர் கன அளவு மாற்றத்துக்கு எத்தசை செ.மீ. நீர் அழுத்த மாற்றம் என்ற கணக்கில் குறிக்கப்படுகிறது.

elastase : எலாஸ்டேஸ் : இணைப்புத் திசுக்களில் காணப்படும் ஒரு நொதிப் பொருள்.

elastic : நெகிழ்.

elastoplaster : நெகிழ்கட்டு.

elbow : முழங்கை : மேற்கையும் முன்கையும் இணையும் இடம்.

முழங்கை மூட்டு : மேற்கையும் முன்கையும் இணையுமிடத்தில் உள்ள மூட்டு.

Eldepryl : எல்டெப்ரில் : செலஜிட்டின் ஹைட்ரோகுளோரைடு என்ற பொருளின் வணிகப் பெயர்.

elective operation : தேர்வு அறுவை.

Electra complex : எலெக்ட்ரா மனப்பான்மை : தந்தைமீது புதல்வி கொண்டுள்ள அளவுக்கு மீறிய பாசம். 'எலெக்டிரா' என்பது ஒரு கிரேக்கப் பெயர்.

electrical burn : மின் சூட்டுப் புண்.

electro-ocupuncture : மின் ஊசி குத்து மருத்துவம்.

electro cardiogram (ECG) : இதய மின்னியக்கப் பதிவு; இதய மின்னலை வரைவு; இதய மின் வரையம் : இதயத்தின் மின்னியல் நடவடிக்கையை நகரும் காகிதப் பட்டையில் பதிவு செய்தல்.

electrocardiograph : இதய மின்னியக்கப் பதிவு கருவி; இதய மின்னலை வரைவி; இதய மின் வரைவி : இதயத்தின் மின்னியல் நடவடிக்கையை நகரும் காகிதப் பட்டையில் பதிவு செய்யும் கருவி.

electrocautery : மின்சூட்டுக் கோல் : ஒரு மின்னோட்டத்தினால் சூடாக்கும் போது, திசுக்களைச் சுடாக்குகிற ஒரு பிளாட்டினம் கம்பி.