பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

endodontics

424

endomyocardial fibro...


இத கனசதுரவடிவத்தில், முதிராத நிலை மஞ்சள் கருப்பைகளின் தொகுதியாக இருக்கும்.

endodontics : பல்வேர் ஆய்வியல் : பல் மருத்துவப் படிப்பில் ஒரு பிரிவு. பல்லின் வேர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளைப் பற்றி விரிவாகக் கற்பிக்கும் பல்மருத்துவ அறிவியல் பிரிவு.

endogenous : உள்வளர்ச்சி : உடலின் உள்ளிருந்து துவங்குகின்ற உள்ளுக்குள்ளேயே வளர்ச்சி யடைகின்ற.

endolymph : செவி நிணநீர்; உள் வடிநீர் : காதின் உள் நீர்மம்; செவி நின நீர்.

endolysin : உயிரணுஉட்பொருள் : சூழப்பட்ட பாக்டீரியாவை அழிக்கக்கூடிய உயிரணு உட்பொருள்.

endometrioma : கருப்பை உள்வரி சவ்வுக்கட்டி; உட்கருப்பைப் புற்று : கருப்பை உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி.

endometriosis : கருப்பை வெளிப்புறக் கோளாறு : கருப்பைக்கு வெளியேயுள்ள அமைவிடங்களின் கூறுகளில் ஏற்படும் கோளாறு.

endometriosis : பிறழ்வு கருப்பை உள்வரிச் சவ்வு; இடமகல் கருப்பை உட்படலம் : இயல்புக்கு மாறான இடங்களில் கருப்பை உள்வரிச் சவ்வு இருத்தல்.

endometritis : கருப்பை வரிச்சவ்வு வீக்கம்; கருப்பை உட் படல அழற்சி; கருப்பை அக வழற்சி : கருப்பை உட்புறச் சவ்வின் வீக்கம்.

endometrium : கருப்பை வரிச்சவ்வு; கருப்பை உட்சளிப் படலம்; கருப்பையகம்.

endometroid tumour : கருப்பை சுரப்புக் கட்டி : ஒருவகை சுரப்பிப் புற்றுநோய். இது அடிப்படை உட்கருப்புற்று நோயை திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் உண்டாகிறது.

endometroid tumour : உட்கருச் சுரப்பிக் கட்டி : இது ஒரு வகைச் சுரப்பிப் புற்று நோய். இது அடிப்படை உட்கரு புற்று நோயைத் திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் ஏற்படுகிறது.

endometry : உட்குழிவு அள்வீடு : ஒர் உட்குழிவின் கொள்ளளவினை அளவிடுதல்.

endomyocardial fibrosis (EMF) : இதயத்தசை நலிவு நோய் : இது வரையறைக்குட்பட்ட தசை நலிவு நோய். இது இளம் வயதில் ஏற்படும். இதனால், இடது, வலது இதயக் கீழறைகள் இரண்டிலும் உட்பாய்வு