பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

endothelin

426

engagement


endothelin : எண்டோத்தெலின் : குருதிநாள உள் அணு அடுக்குத் திசுவிலிருந்து பெறப்படும் பல பெப்டைடுகளில் ஒன்று. இது மிகவும் சக்திவாய்ந்த குருதி நாள இறுக்க மருந்து. இது நீண்டகால அழுத்தத் துலங்கல், ஆல்டாஸ்டிரோன் வெளியாவதைத் தூண்டுதல், ரெனின் வெளியேறுவதைத் தடுத்தல் ஆகிய பணிகளைச் செய்கிறது.

endothelioma : உயிரணுக்கட்டி : குருதிக்குழாய் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி.

endothelium : உள்வரித்தாள் சவ்வு; உள் அணு அடுக்குத் திசு : குருதிக் குழாயின் உயிர்மச் செறிவாலான உள்வரித்தாள் சவ்வு.

endothrix : தோல் போசணம் : ஒருவகைத் தோல் பூசணம். இது பெரும்பாலும் முடியின் ஊடு புழையினுள் கட்டியாகவும், நுண்மங்களாகவும் உண்டாகிறது.

endotoxin : உயிரணு நச்சு; அகநச்சு; உள்நச்சு : உயிரணுவின் கட்டமைப்பைக் கொண்ட பாக்டீரியா நச்சுப்பொருள். இது உயிரணுவை அழிப்பதால் உண்டாகிறது.

Endoxana : எண்டோக்சானா : சைக்ளே ஃபாஸ்ஃபாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

end-plate : முனைத் தகடு : நரம்புத் தசை அணைப்பில் தட்டையான தகட்டு வடிவில் உண்டாகும் விரிவாக்கம். இந்த இணைப்பில் ஒரு நரம்புச் சவ்வின் இயக்க நரம்பு இழை, ஒரு மண்டையோட்டுத் தசை இழையை இணைக்கிறது.

end-stage renal disease (ESRD) : முனை நிலைச் சிறுநீரக நோய் : கடுமையான சிறுநீரக நோயின் செயலிழப்பு நிலை.

endurance : தாங்கும் திறன் : இயல்பு மீறிய உளவியல் அல்லது உடலியல் அழுத்தத்தைத் தாக்குப் பிடிப்பதற்கான திறன்.

Enduron : எண்டூரான் : மெத்தில் குளோரோத்தியாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

enema : குடல் கழுவல்; மலக் குடல் கழுவல்; குடற் கழுவி : குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவியைக் குதவாய் வழியே செலுத்தி நீரேற்றிக் குடல் கழுவுதல்.

energy : ஆற்றல்.

enflurane : என்ஃபுளுரான் : உப்பீனியேற்றிய ஈதர்; இது விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம். மயக்க மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது.

engagement : குழந்தை தலை வெளிப்பாடு : குழந்தை பிறப்பதற்கு முன்பு இடுப்புக் குழியினுள் முதிர்கருச் சிசுவின் தலை நுழைதல் அல்லது உறுப்பு முன்னிலையாதல்.