பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enophthalmos

427

enterocholecystostomy


enophthalmos : கண்விழிச் சுருக்கம்; விழித்துருத்தம்; அழுந்துகண் : கண்விழி அதன் குழியினுள் அளவுக்கு மீறி சுருங்கியிருத்தல்.

en plaque : நைவுப் புண் : ஒர் உறுப்பின் மேற்பரப்பில் அமைந்துள்ள தட்டையான, வெண்மையான, இழைமமான நைவுப் புண்.

enriched food : சத்தூட்டிய உணவு : உணவுப் பொருள் களுக்கு மெருகூட்டும்போது ஏற்படும் ஊட்டச்சத்து இழைப்பினை ஈடுசெய்வதற்காக வைட்டமின்கள், கனிமப்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு உணவுக்கு ஊட்ட முட்டுதல்.

Entamoeba : ஓரணு ஒட்டுண்ணி; அமீபா ஒற்றையணு; குடல் வாழுயிருண்ணி : மனிதரைப் பிடிக்கும் ஒட்டுண்ணி. இதில் மூன்று இனங்கள் உண்டு. ஒர் இனம் வாயில் நோய் உண்டாக்குகிறது. இன்னொன்று சீதபேதிக்குக் காரணமாகிறது.

enteral : குடல் வழி.

enteric : குடற் காய்ச்சல் : குடல் சார்ந்த காய்ச்சல்.

entric fever : குடற் காய்ச்சல் :

enteritis : குடல் அழற்சி : குடல்களில் ஏற்படும் வீக்கம். இதனை 'குரோன் நோய்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

enteroanastomosis : குடல் பின்னல்; குடல் இணைப்பு : குடல்கள் பின்னி ஒன்றுபடுதல்.

enterobacter : கிராம்-எதிர்மறை உயிரி : ஆக்சிஜன் உள்ள கிராம் எதிர்மறை உயிரி. இது தளர்ச்சி யுற்ற நோயாளிகளிடம் சீதசன்னியை (pneumonia) உண்டாக்குகிறது.

enterobacteriaceae : கரு மூல உருவாகா உயிரி : கருமூலம் உருவாகாத கிராம் எதிர்மறை உயிரிகளின் ஒருவகை. விகெல்லா, சால்மோனெல்லா, கிளேசியெல்லா, எஸ்செரிஷியா, எர்சினியா போன்ற உயிரிகள் இதில் அடங்கும்.

enterobiasis : எதிர்மறை உயிரி குடலைத் தாக்குதல் : எதிர்மறை உயிரி வகையைச் சேர்ந்த நெமாட்டோடுகள் குடலில் மொய்த்தல்.

Enterobius vermicularis : நீள் உருளைப்புழு சிறு குடலிலும், பரவும் நீண்ட உருண்ட புழு வகை.

enterocele : உறுப்பு இடம் பெயர்வு; குடல் பிதுக்கம்; குடல் சரிவு : மலக்குடல் இடப்பெயர்வு, கருப்பை நெகிழ்ச்சி.

enterocholecystostomy : சிறுகுடல் பிளப்பு : பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்குள் ஒரு திறப்பினை உருவாக்குதல்.