பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

abortion-spontaneous

42

abscission


abortion-spontaneous : கரு இயற்சிதைவு.

abortion-threatened : கருமருட் சிதைவு.

abortive : உரிய காலத்துக்கு முன்பிறந்த; வளர்ச்சி தடைபட்ட; முழுமையாக வளர்ச்சியடையாத: குறிப்பிட்ட காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிறத்தல்.

abortus : சிதைவுற்றகரு: சிதைவுற்ற அல்லது சிதைவுறுத்தப்பட்ட கரு. இது 500 கிராமுக்கும் குறைவான எடையுடன் இருக்கும். இது இறந்து போனதாகவோ அல்லது உயிர் பிழைக்க இயலாததாகவோ இருக்கும்.

abrasion : தோல் சிராய்ப்பு: சிராய்ப்பு; தோற்காயம்.

abrasive : உராய் பொருள்.

abrachia : கையற்ற: பிறவியிலேயே கைகள் இல்லாத நிலை.

abrade : நேய்; சுரண்டு, அராவு: உராய்தல்.

abrasion : சிராய்ப்பு; தோற் காயம்: சுரண்டுதல் அல்லது உராய்தல் மூலம் தோலில் அல்லது சளிச்சவ்வில் ஏற்படும் மேற்காயம் அல்லது தோல் உரிதல். தழும்புள் திசுவினை நீக்குவதற்கு மருத்துவ முறையில் இது பயன்படுத்தப்படுகிறது.

abreaction : மனக்கிடக்கை திறப்பு: அக எதிரியக்கம்; சோக நினைவின் எதிர்விளைவு; அக எதிரியக்கம்; மன உட்கிடக்கைத் திறப்பு: கடந்தகால வேதனை மிகுந்த அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் ஏற்படும் ஒருவகை உணர்ச்சித் தூண்டுதல். இது, உளவியல் பகுப்பாய்வின் போது அல்லது இலேசான மயக்க நிலையின்போது அல்லது மருந்துகளின் பாதிப்பின் போது பேச்சிலும் வெளிப்படுகிறது.

abresprecaterius : குன்றிமணி.

abrosia : உணவின்மை.

abruptio : இற்று விழுதல்; கிழிந்து விடுதல்; முறிந்து விடுதல்; பனிக் குடம் விலகல்: கருக் குழந்தை முழு வளர்ச்சியடைவதற்கு முன்பே பணிக்குடம் உடைந்து பனிக்குடநீர் வடிந்து விடுதல்.

abruptioplacenta : கருக்குடை விலகல்.

abscess : சீழ்க்கட்டு, கழலை; கட்டி: சீழ் உருவாக்கும் உயிரிகள் ஒர் உறுப்பெல்லைக்குள் உண்டாக்கும் சீழ்த்தொகுப்பு. இது தீவிரமானதாகவோ நாட்பட்டதாகவோ இருக்கலாம்.

abscissa : கிடையச்சுத் தூரம்: ஒரு புள்ளியிலிருந்து நிலை யச்சுக்குள்ள நேர் தொலைவு.

abscission : வெட்டி நீக்கல்: ஒன்றை வெட்டி நீக்குதல்.