பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enteropathy

429

Entonox


குடல் அழற்சி, குளோகன் நோய் ஆகிவற்றுடன் தொடர்புடைய எடையைத் தாங்கும் முட்டுகளை இது தாக்கும்.

enteropathy : குடல் நோய் : குடல் சார்ந்த ஏதேனும் நோய்.

enteroptosis : குடல் கீழ்முகச் சரிவு : அடிவயிற்று உட்குழிவினுள் குடல்கள் கீழ் முகமாகச் சரிதல்.

enteroscope : குடல் உட்புழை அகநோக்குக் கருவி : குடலில் உள்ள உட்புழையினைப் பார்க்கப் பயன்படும் அகநோக்குக் கருவி.

enterostomy : குடல் அறுவை சிகிச்சை : அடிவயிற்றுச் சுவருக்குள் திறப்பு உண்டாகும் வகையில் குடலுக்குள் ஒரு செயற்கையான திறப்பினை ஏற்படுத்துதல்.

enterostomy : அறுவைப் புண் வாய் புரை; சிறுகுடல் புரை; குடல் வாயமைப்பு : சிறு குடலுக்கும் வேறேதேனும் பரப்புக்கும் இடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கிய புண்புரை.

enterotomy : சிறுகுடல் கீறல் : சிறுகுடலினுள் வெட்டுப்பள்ளம் ஏற்படுத்துதல்.

enterotoxin : குடல் நஞ்சு : குடலில் உண்டாகும் ஒரு நோய் நஞ்சு, குறிப்பாகக் குடல் சளிச் சவ்வு உயிரணுக்களில் உண்டாகும் நஞ்சு,

enterotoxin : குடல் நஞ்சு : இரைப்பை குடற்பாதையில் பாதிப்பு உண்டாக்கும் ஒரு வகை நச்சு. இதனால், வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிற்றில் வலி ஏற்படுகின்றன.

enterovesical : குடல்-சிறுநீர்ப்பைக இணைப்பு : குடலுக்கும், சிறுநீர்ப்பைக் குமிடையிலான தொடர்பு இணைப்பு.

enterovirus : இரைப்பைக் குடல் கிருமி : இரைப்பைக் குடல் வழியைப் பாதிக்கும் நோய்க் கிருமி. இது 'பிக்கார்னோ' நோய்க் கிருமி வகையைச் சேர்ந்தது. இதில் போலியோ காக்ஸ்சாக்கி, எக்கோவைரஸ் போன்ற கிருமிகளும் அடங்கும்.

enteroviruses : உணவுக்குழாய் நோய்க் கிருமிகள்; குடல் அதி நுண்ணுயிரி; குடல் நச்சுக் கிருமி : உணவுக்குழாய் வழியாக உடலுக் குள் புகும் நோய்க் கிருமிகள்.

enterozoa : குடல் ஒட்டுண்ணி : குடலில் பரவும் ஒருவகை விலங்கு ஒட்டுண்ணி.

entomology : பூச்சியியல் : பூச்சிகள் பற்றி ஆராயும் விலங்கியியலின் ஒரு பிரிவு.

Entonox : என்டோனாக்ஸ் : 50% நைட்டிஸ் ஆக்சைடு, 50% ஆக்சிஜன் கலந்த, நோவகற்றும் மருந்தின் வணிகப் பெயர். இது சுவாசம் மூலம் செலுத்தப் படுகிறது.