பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

erythrocytosis

438

esmodil


erythrocytosis : சிவப்பணுத்திரட்சி : சிவப்பணுக்கள் மொத்தத் திரட்சி அதிகரித்தல்.

erythroderma : செம்படலம் : தோலில் பரந்த பகுதியில் இயல்புக்கு அதிகமாக சிவப்பு நிறம் பரவியிருத்தல்.

erythroid : செம்மையான : சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் உயிரணுக்களின் பெருக்கத்தைக் குறிக்கிறது.

erythromelia : செந்தடிப்பு நோய் : வயதான பெண்களிடம் ஏற்படும் ஒரு நோய். முட்டுப் பகுதியில் ஏற்படும் செந்தடிப்பு நோயினால் எரிச்சல், வலி உண்டாகி இந்நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து குணம்பெற ஆஸ்பிரின் பயன் படுத்தப்படுகிறது.

erythromycin : எரித்ரோமைசின் : பெனிசிலினைப் போன்ற வாய் வழி உட்கொள்ளப்படும் மருந்து.

erythropenia : சிவப்பணுக் குறைபாடு; சிவப்பணுக்குறை : சிவப்பு உயிரணுக்களின் எண்ணிக்கை குறைதல் எரித்ரோசைட்டோ பீனியாவின் சொற் குறுக்கமாக அமைந்துள்ளது.

erythropoietin : எரித்ரோபோபாய்ட்டின் : எலும்பு மச்சையில் சிவப்பணு உற்பத்தியைத் தூண்டிவிடும் ஒர் இயக்குநீர். இது மையம் நோக்கிய சிறுநீரக நுண் குழல்களையொட்டி உள்ள உயிரணுக்களினால் உற் பத்தி செய்யப்படுகிறது.

erythrosine : எரித்ரோசின் : பல் மாத்திரைகளில் பயன்படுத்துப் படும் ஒருவகைச் சிவப்புச் சாயம்.

Esbatal : எஸ்பாட்டால் : பெத்தானிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

eschar : தோல் பொருக்கு : எரிச்சல் தரும் பொருள்கள், அகவெப்ப மூட்டல் போன்றவற்றால் உண்டாகும் தீக்கொப்புளத்தின் படரும் பொருக்கு.

escharotic : பொருக்குண்டாக்கும் பொருள் : தோலில் பொருக்கு ஏற்படுத்தும் ஒரு பொருள்.

Escherichia : குடல் கிருமி : முதுகெலும்பு உயிர்களின் குடலில் பரவலாகப் பரவியிருக்கும் ஒரு வகைப் பாக்டீரியா. இவற்றில் சில மனிதரும் நோய் உண்டாக்கும். முக்கியமாகக் குடற் காய்ச்சல் மற்றும் சிறுநீர் தாரை அழற்சிக்குக் காரணம்.

eserine : எசெரின் : பித்தநீர்த் தடுப்பு மருந்து ஃபைசோடிக் மின் போன்றது.

Esidiex : எசிட்ரக்ஸ் : ஹைட்ரோகுளோர்த்தியாசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

esmodil : எஸ்மோடில் : தசைச் சுரிப்புக் கோளாறு தடுப்பு மருந்து கார்பக்கோல் போன்றது.