பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

absence

43

abstraction


absence : கவனமின்மை; சுய நினைவின்மை; நாட்டமின்மை: சிறிது நேரத்திற்கு சுயநினைவு தவறுதல்.

இயக்கமற்ற வலிப்பு நோய்: இந்த வலிப்பு நோயாளிக்கு சிறிது நேரம் சுயநினைவு இழக்கும், ஆனால் கைகால்கள் வெட்டியிழுக்காது.

absolute : முற்றிலும்; தனி; முழுமையான.

absolute refractory period : முழுச் செயலற்றக் காலம்: முழு இணக்கமிலாக் காலம்.

absolutist : தன்னுணர்வாளர்.

absorb : உறிஞ்சு: (1) உறிஞ்சி ஈர்த்துக் கொள். (2) ஒளிக்கற்றையின் செறிவைக் குறை.

absorbefacient : உட்கவர்ச்சி ஊக்கி: உறிஞ்சுதலை அல்லது உட்கவர்தலை ஊக்குவிக்கின்ற ஒரு பொருள்.

absorbence : உறிஞ்சும் தன்மை; உட்கவர் திறன்; ஈர்க்கும் ஆற்றல்: ஒரு திசுவானது ஒளிக்கற்றைகளை உறிஞ்சும் தன்மை.

absorbent : உறிஞ்சான்; உட்கவர்ப்பி; உறிஞ்சி : உட்கவரும் பொருள்.

absorbent cotton : ஈர்ப்புப் பஞ்சு.

absorptionmeter : உள்ளுறிஞ்சல் மானி.

absorption: உட்கவர்தல்; உள்ளுறிஞ்சல்; அகத்துறிஞ்சல்: (1) திடப்பொருட்கள் வாயுக்களை அல்லது திரவங்களை உறிஞ்சுதல் அல்லது எடுத்துக் கொள்ளுதல். திரவங்கள் திடப்பொருட்களை அல்லது வாயுக்களை எடுத்துக் கொள்ளுதல். (2) உடற்காப்பு ஊக்கியைச் சேர்ப்பதன் மூலம் ஒர் எதிர் அங்கப்பொருளை அகற்றுதல் அல்லது ஒர் எதிர் அங்கப் பொருளைச் சேர்த்து உடற்காப்பு ஊக்கியை அகற்றுதல்.

abstinence : தளர்வு; தளர்த்தல்; தவிர்ப்பு; விட்டொழித்தல்: (1) மதுப்பழக்கத்தை விட்டொழித்தல். (2) சிறிது காலம் உடல் உறவின்றி இருப்பது. உடலுறவில் ஈடு படாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

abstinence syndrome : விடுப்பு இணைப் போக்கு.

abstract : சுருக்கம்; பிழிவு; பொழிப்பு; பிரித்தெடு: கட்டுரைச் சுருக்கம்.

abstraction : பிரித்தெடுதல்: (1) ஒரு கலப்பினப் பொருளிலிருந்து முக்கியமான அல்லது தேவையான பொருளை மட்டும் பிரித்தெடுத்தல். (2) கவனக்