பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exhumation

446

exophthalmic goitre


exhumation : பிணத்தைத் தோண்டியெடுத்தல் : புதைத்த பிறகு சடலத்தை மண்ணிலிருந்து தோண்டியெடுத்தல்.

exocytosis : துளிவெளியேற்றம் :ஒர் உயிரணுவிலிருந்து துகள்களை வெளியேற்றுதல்.

exfoliation : திகப்படலம் உதிர்தல்; பக்குப் படிமம்; தோலுறிதல் : திகப்படலங்கள் சிம்பு சிம்பாக உதிர்தல்; பால் பற்கள் விழுதல்.

exhelation : நீர்மக் கசிவு; மூச்செறிதல்; மூச்சு விடுகை : உடலின் நீர்மங்கள் குருதியுடன் சிறிதுசிறிதாகக் கசிந்தொழுகுதல்.

exhaustion : முழுச்சோர்வு; உடல் ஆற்றல் இழப்பு; களைப்பு : உடலின் உரம் முழுமையாக வடிந்து, சோர்வு ஆட்கொள்ளுதல்

exhibitionism : அம்மணச் சித்தக் கோளாறு; இன உறுப்பைக் காட்டி மகிழ்தல் : பிறர் ஏளனத்துக்கிடமாக மடத்தனமாக நடந்து கொள்ளுதல், பிறப்புறுப்புகளை மற்றவர்கள் பார்க்கும்படி அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறு நிலை. இது ஆண்களுக்கே ஏற்படுகிறது.

exna : எக்ஸ்னா : பென்ஸ்தையாசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

exocrine : புறச்சுரப்பு; நாளச் சுரப்பிகள்; வெளிச்சுரப்பு : புறப்பகுதியில் சுரப்பு நீர் சுரக்கும் சுரப்பிகள்.

exodontics : பல் பிடுங்கு மருத்துவம் : பற்களைப் பிடுங்கி எடுத்தல் தொடர்பான பல் மருத்துவத்தின் பிரிவு.

exodous ball : யோனிக் குழாய் உயிரணு உருண்டை : கருப்பை உயிரணுக்களின் வட்டவடிவக் குழுமம். இது மாதவிடாய்க்கு 6-10 நாட்களுக்குப் பிறகு யோனிக் குழாயில் காணப்படும்

Exolan : எக்சோலன் : கரைபடாத எரிந்து போகாத ஒரு டைத் ரோனால் வகை மருந்தின் பெயர்.

exon : எக்சான் : ஒருபாலி பெட்டைடை ஒருங்கிணைக்கும் ஒரு மரபணுவின் கூறு.

exonuclease : எக்சோநியூக்ளியேஸ் : நியூக்கிளியோட்டைடுகளின் நீரால் பகுப்பினை ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள்.

expectovate : கபம் வெளியேற்றல்.

expectoration : இருமிச் சளி வெளியேற்றல்.

exophthalmic goitre : கண்விழிப் பிதுக்கம் : கண்விழி அளவுக்கு மீறிப் பிதுங்கியிருத்தல் இந்நோய் கண்டவர்களுக்குக் கழுத்து வீங்கியிருக்கும். இது கேடயச்