பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exophthalmos

447

exploration


சுரப்பி (தைராய்டு) நோய்களில் ஒன்று.

exophthalmos : கண்விழிப் பிதுக்கம்; விழித்துறுத்தம் : கண்விழி இயல்புக்கு மீறிப் பிதுங்கியிருத்தல்.

exoplasm : உயிர்ச்சத்துப் புறப் படலம்.

exoskeleton : உடல் புறத்தோடு : எலும்பாக அல்லது தோலாக உள்ள உடலின் புறத்தோடு.

exostosis : எலும்புத்திசுக் கட்டி; எலும்பு முண்டு : எலும்புத் திசு அளவுக்கு மீறி வளர்ந்து கடுமையற்ற ஒரு கட்டியாக உருவாதல்.

exotic : அயல்நாட்டு நோய்கள் : அயல்வரவுப் பொருள். வேறு வகையில் வந்திருக்காத ஒரு நாட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்கமதியான நோய்கள்.

exotoxin : எக்சோடாக்சின்; புற நச்சு; அயல் நச்சு : பாக்டீரியாவின் ஒரு நச்சுப் பொருள். இது உயிரணு வளர்ச்சியின்போது அதன் சூழலுக்குள் புகுத்தப் படுகிறது.

exotropia : புறமுக மாறுகண் : ஒரு கண் மற்றக் கண்ணைப் பொறுத்தவரையில் வெளிப்புறமாக மாறுபட்டிருக்கும் ஒரக்கண்பார்வை.

expectorant : இருமல் மருந்து; சளி இளக்கி : கபத்தை வெளிக் கொணரும் மருந்து.

expansive mood : தற்பெருமை மனப்போக்கு : ஒருவர் தன் சொந்த முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைபட மதிப்புக் கொண்டு அந்த உணர்வைத் தங்குதடையின்றி வெளிப்படுத்துதல்.

expectoration : கபம் உமிழ்வு; சளி நீக்கம்; சளி இளக்கம் : இருமிச்சளியை வெளிப்படுத்துதல்.

expiration : மூச்சு வெளியிடுதல்; வெளிமூச்சு; மூச்சு விடல் : மூச்சை வெளியிடுதல்; இறந்து போதல்.

exploration : காயப்பரிசோதனை; தேடல் : காயத்தைத் தொட்டுப் பரிசோதனை செய்தல்.