பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exponential phase

448

extensor


exponential phase : பெரு வளர்ச்சி நிலை : வளர்ச்சியின் போது பாக்டீரிய மிகப்பெருமளவில் வளர்ச்சியடையும் நிலை.

Expranolol : எக்ஸ்பிரானோலாஸ் : புரோப்ரானோலால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

expression : வெளிப்பாடு; பிதுக்கல்; முகபாவம் : கருப்பை யிலிருந்து நச்சுக்கொடி வெளியேறுதல். தாயின் மார்பகத்திலிருந்து பால் வெளிப்படுதல் போன்ற வெளிப்பாடுகள். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவங்களையும் குறிக்கும்.

expressive dysphasia : பேச்சுக் கோளாறு : மொழியை மனத்தளவில் உருவாக்கும் திறன் இருந்த போதிலும் அந்த மொழியை அறிவார்ந்த முறையில் வெளிப்படுத்த முடியாத நிலை.

expressive motor aphasia : மொழித் தடுமாற்றம் : சொல்லப்படுவது என்ன, அதற்கு என்ன பதில் சொல்வதென நோயாளி நன்கறிந்திருந்தும், அதனை ஒழுங்கு பட மொழிக் குறியீடுகளாக ஒருங்கிணைத்துக் கூற முடியாதிருக்கும் நிலை. இதனால் நோயாளி கூறப்படுவதைப் புரிந்துகொள்ள இயலாதிருக்கிறார் என்ற எண்ணம் உண்டாகிறது.

expressivity : புலப்படுதிறன் : ஒரு குறிப்பிட்ட மனிதரிடம் மரபணு வெளிப்படையாகப் புலப்படும் அளவு.

exsanguination : குருதி வடிப்பு; குருதி வடித்தல் : குருதியை வடித்து வற்றச் செய்து, குருதிச் சோகையுண்டாக்குதல்.

exatrophy : புறநிலை மாற்றம் : ஒர் உறுப்பின் உட்பகுதி வெளிப் புறமாகத் திரும்பியிருத்தல், இது தேங்குகையில் ஒரு வளர்ச்சிக் குறைபாடாக ஏற்படுகிறது.

extended breech : நீள் பிட்டம் : இரு முழங்கால்களும் நீண்டிருக்கும் பிட்டம். இதில் நூல்கள் பெரும்பாலும் நேராக இருக்கும்.

extended family : விரிவுரு குடும்பம் : தாய், தந்தை, குழந்தைகள் ஆகியோரை உள் மையமாகக் கொண்டிருந்து, அதே குடும்பத்தில் அல்லது அதற்கு மிக அருகில் வாழும் பிற குருதியுறவு உறவினர்களைக் கொண்டுள்ள ஒரு குடும்பம்.

extender : நீட்சி மருந்து : மற்றொரு மருந்தின் செயலை நீட்டிக்கு மாறு செய்கிற ஒரு மருந்து.

extension : உறுப்பு நீட்டிப்பு; நீட்டல்; விரிவாக்கம்; இழுத்தல் நீட்டுகை :வளைந்து போன உடலுறுப்புகளை நேராக நிமிர்த்துதல்.

extensor : நீட்டத்தசை நீட்டி : உடற்பகுதியினை நிமிர்த்தும் தசை